(Reading time: 11 - 22 minutes)
Sunset

உன்னைப் பார்த்தால்! கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கம்மா! நீயும் தான்டா முனுசாமி! ராத்திரி பூரா ஆட்டோ ஓட்டிட்டு உடம்பு அசந்து வந்திருக்கே, போய் தூங்கு நிம்மதியா!"

 பேசிக்கொண்டே தன் கணவன் தர்மதுரையை தேடிச் சென்றுவிட்டாள். 

 மறுபடியும் இருவருக்கும் ஏமாற்றம்!

 பர்வதம் முனுசாமியை பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்தான்.

 " ஆமாங்க! அத்தை சொல்றது சரிதாங்க! உங்க உடம்பு நோவும், முதுகு வலிக்கும், போய் படுக்கையிலே படுத்துப் புரளுங்க! மனசிலே எதையும் போட்டு குழப்பாதீங்க! போங்க!"

 முனுசாமியின் மனது வலித்தது! "ச்சே! இவள்கூட அருகில் அமர்ந்து ஆறுதலாகப் பேசி என் மனதில் உள்ள குற்ற உணர்ச்சி பற்றி விசாரிக்கக்கூடாதா?"

 அதே நேரத்தில், பர்வதத்தின் மனமும் அதே காரணத்துக்காக வலித்தது.

 தண்ணீர் தேங்கி நிற்கிற இடத்தில், புழுக்களும் பூச்சிகளும் பெருகும்! அதுபோல், குற்ற உணர்வு காரணமாக, மனம் செக்குமாடு போல, சுற்றிச் சுற்றி வந்தால், நமது செயல்களும் நின்றுபோகும்! 

 மனிதனின் இயல்பே, உடல்-தான் எனும் நினைவு-மனவளர்ச்சி எனும் மூன்றின் சேர்க்கையே! அவன் ஆசைகள், நினைவுகளினால் இயக்கப்படுகிறான்!

 வருத்தமும் சோகமும் நமது வாழ்வின் இன்றியமையாத அம்சங்கள்! நோய், முதுமை, மரணம் தவிர்க்க முடியாதவைகளோ, அவைபோல!

 உண்மையில், மனிதன் சிந்திக்க கற்றுக்கொண்ட உடல் இயந்திரங்கள்!

 பர்வதமும் முனுசாமியும் எத்தனை நேரம்தான் சிலையாக அமர்ந்திருக்கமுடியும்

 முனுசாமி கை கழுவிக்கொண்டு உறங்கச் சென்றான்.

 பர்வதமும் சேலைத் தலைப்பிலிருந்த கிழிசலை தைத்து முடித்துவிட்டு, எழுந்தாள்.

 பக்கத்து வீட்டு ரஞ்சனி, தன்னிடம் கெஞ்சிய அந்தக் குரல், பர்வதம் எத்தனை மறக்க நினைத்தாலும், செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தது!

 " ஒரு குடம், ஒரே ஒரு குடம், தண்ணீர் தந்தால், போதும். எப்படியோ சமாளித்து சோறாக்கி பிள்ளைகளின் பசியை போக்குவேன், அவர்கள் பசியால் துடிக்கிறார்கள். தயவு பண்ணு, பர்வதம்!"

 " ரஞ்சனி! உன்னை பார்த்தால், பரிதாபமாயிருக்கு! ஆனால், உனக்கு ஒரு குடம் தண்ணீர் கொடுத்தால், அதைப் பார்த்து இந்த தெருவிலே கிணற்றிலே தண்ணீர் வற்றிப்போன அத்தனை வீடுகளிலிருந்தும் ஒரு குடத்தை தூக்கிண்டு வந்து நிற்பாங்களே! என்னாலே தரமுடியாதே! ரஞ்சனிக்கு மட்டும்தான் தருவியா, எங்களுக்கு கிடையாதான்னு சண்டை போடுவாங்களே,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.