(Reading time: 11 - 22 minutes)
Sunset

ஏதாவது தவறான முடிவுக்கு வந்திருப்பாளோ என, பர்வதம் பயந்து நடுங்கி பின்புறமாகச் சென்று, பார்த்தாள். 

 பின்பக்கத்து கதவு திறந்திருக்கவே, உள்ளே நுழைந்தாள்! அங்கே, ரஞ்சனி தன் பிள்ளைகளுடன் அழுது அழுது மூர்ச்சையாகிக் கிடந்தாள்.

 மயக்கம் தெளிவிக்கக்கூட அந்த வீட்டில், ஒரு சொட்டுத் தண்ணீரில்லை!

 பர்வதம் தான் கொண்டுவந்த தண்ணீரை அவர்கள் முகத்தில் தெளித்து எழுப்பி தண்ணீர் குடத்தை காட்டினாள்.

 அதைக் கண்டவுடன், ரஞ்சனி பாய்ந்து எழுந்து, "பர்வதம்" என கூவியவாறு அவளை அழைத்தவாறே அழுதாள்.

 " சரி சரி, முதலில் நீயும் பிள்ளைகளும் இந்தப் பையிலுள்ள பழங்களையும் பிஸ்கெட்டையும் சாப்பிடுங்கள்! அதற்குள் நான் அடுப்பை மூட்டி, அரிசியைக் களைந்து, குக்கரில் வைக்கிறேன்.........."

 " நீ முதல்லே உட்கார், பர்வதம்! எங்களை காப்பாற்றிய தெய்வம் நீ! நீயே உன் கையால் பழங்களை பிள்ளைகளுக்கு கொடு! அதற்குள் நான் சமையலைக் கவனிக்கிறேன்..........."

 பர்வதம், தன்னால் அந்த வீட்டிலிருந்த சூழ்நிலையை மாற்றி, சில உயிர்களை சமயத்தில் உதவி செய்து காப்பாற்ற முடிந்ததே என பெருமையும் பூரிப்பும் அடைந்தாள்.

 கூடவே, அவள் உள்மனம், அவளுக்கு ஒரு செய்தியை காதில் கடித்தது!

 " பிழை செய்வது மனித இயல்பு! அதையே நினைத்து புலம்புவது பயனில்லை; மாறாக, செய்த பிழையை எப்படி சரிசெய்யலாமென யோசித்து செயல்படவேண்டும்! அதுதான் விவேகம்!"

 உறக்கம் வராமல், முனுசாமி படுக்கையிலிருந்து எழுந்து சட்டையை போட்டுக்கொண்டு, நேரே காவல் நிலயத்துக்குச் சென்று, இரவு நடந்ததை விவரமாக எழுதி கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுத்து அபலைப் பெண்களை காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டான்.

 நிம்மதியாக வீடு திரும்பி குறட்டை விட்டு தூங்கினான்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.