(Reading time: 11 - 22 minutes)
Sunset

நான் என்ன செய்வேன்? என்னாலே முடிந்தது, உன் பிள்ளைகளை என் வீட்டுக்கு அனுப்பு, அவங்க பசிக்கு சோறு போட்டு அனுப்பறேன், என்னாலே முடிந்தது அதுதான்!"

 " சேச்சே! என் பிள்ளைகளை சோற்றுக்கு வீடுவீடா அனுப்பறது, என் புருஷனுக்கு பிடிக்காது, கடவுளே! நீதான் என் பிள்ளைகளின் பசியைப் போக்கணும்........."

 என்று சொல்லிக்கொண்டே, கண்களைத் துடைத்துக்கொண்டு ரஞ்சனி திரும்பிச் சென்ற காட்சி, பர்வதம் கண்களில் மீண்டும் மீண்டும் காட்சி தந்தது!

 பர்வதம், தான் எடுத்த முடிவு தவறோ, ரஞ்சனிக்கு ஒரு குடம் தண்ணீர் கொடுத்திருக்கவேண்டுமோ என முடிவு செய்யமுடியாமல், தவித்தாள்.

 ரஞ்சனியின் பிள்ளைகளின் பசிக்கு, தான் காரணமாகிவிட்டோமோ, தன்னால் எப்படி அந்த மனிதாபிமானம் இல்லாத முடிவை எடுக்க முடிந்தது, என்று பர்வதம் வருந்தி தவித்தாள்.

 அதிலும், திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகியும், குழந்தை பிறக்காத நிலையில் இருக்கிற தான் அப்படி செய்தது, நிரந்தரமாகவே வாழ்வு முழுவதும் மலடியாக இருக்கும் நிலைக்கு ஆளாக்கிவிடுமோ என அஞ்சினாள், பர்வதம்!

 நல்லவேளை! ரஞ்சனி கோபத்தில், " மலடியாக இருக்கிற உனக்கு, எப்படி என் பிள்ளைகளின் பசி வலி புரியப்போகிறது?" என்று சபிக்கவில்லை!

 சென்னை புறநகரில் உள்ள அந்த தெருவில் உள்ள அறுபது வீடுகளில், ஐம்பது வீடுகளுக்கு மேல், கிணறு வற்றிப்போய், தண்ணீருக்காக தவிக்கிறார்கள். கார்ப்பொரேஷன் அதிகாரிகளும் கை விரித்துவிட்டனர். தனியார் தண்ணீர் லாரிகளின் வரத்தும் நின்றுவிட்டது. எங்கிருந்தாலும் தண்ணீரை லாரியில் கொண்டுவந்து, சென்னைவாழ் மக்களுக்கு தொடர்ந்து பணம் பெற்றுக்கொண்டு, சப்ளை செய்துவந்த லாரி டிரைவர்களை தண்ணீர் உள்ள இடத்து மக்கள், தண்ணீர் எடுக்கச் சென்றபோது, அடித்து விரட்டுகிறார்களே!

 மக்கள், அரசின் கவனத்தை கவர, நடுவீதியில் காலி குடத்துடன் மறியல் செய்து அதை எல்லா டி.வி. சேனல்களும் ஒளிபரப்பும் செய்தாகிவிட்டது.

 மழை பெய்தால் இனி தண்ணீர் கிடைக்கும் என அரசு கை விரித்துவிட்டது. கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்குகிற திட்டம் ஆரம்பிக்கவேயில்லை, எப்போது துவங்கி, எத்தனை ஆண்டுகள் கழித்து, தண்ணீர் கிடைக்குமோ!

 படுத்துக்கொண்டுவிட்டதுடன், உறக்கம் வந்துவிடுமா என்ன? முனுசாமி புரண்டு புரண்டு படுத்தான். மீண்டும் மீண்டும், அந்த அபலையின் கெஞ்சலும் கதறலும் கண்ணீரும் பதட்டமும் கண்முன்னே வந்து போயின! 

 ஆட்டோ ஸ்டாண்டில், விடியற்காலையில், இரவு எட்டு மணியிலிருந்து, விடியற்காலை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.