(Reading time: 11 - 22 minutes)
Sunset

 முனுசாமிக்கு திடுமென இப்படி ஒரு நெருக்கடி வருமென தெரியாத காரணத்தால், உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை!

 ஏனெனில், இப்படி சில நிகழ்ச்சிகளைப் பற்றி, சக ஆட்டோ டிரைவர்கள் அவனை எச்சரித்திருந்தார்கள்.

 அந்தப் பெண் சொல்வதை நம்பி, அவளை ரௌடியிடமிருந்து காப்பாற்றும் நல்ல எண்ணத்துடன் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்றவுடன், வழியில் நாலைந்து பேர் ஆட்டோவை மறிப்பார்களாம். அந்தப் பெண் அவர்களிடம் தன்னை ஆட்டோ டிரைவர் கடத்திச் செல்வதாக வும் காப்பாற்றவேண்டுமெனவும் கதறுவாளாம்! அவர்கள், ஆட்டோ டிரைவரை போலீஸில் ஒப்படைப்போம் என பயமுறுத்தி அவனிடம் உள்ள எல்லா பணத்தையும் கறந்துகொண்டுவிட்டு சென்றுவிடுவார்களாம்!

 " உன்னை எப்படிம்மா நம்பறது? என்னை விட்டுவிடும்மா! வேறு ஆட்டோவை பார்த்துக் கொள்ளம்மா!"

 அந்தப் பெண், உடனே தன் ஆடையை களைந்து, உடலில் பல இடங்களில் தெரிந்த காயங்களைக் காட்டினாள்.

 " ஐயா! அந்த ரௌடியிடம் மறுபடியும் மாட்டினால், என்னை சித்திரவதை செய்வான், நம்புங்க என்னை, உங்க கூடப்பிறந்த தங்கச்சியா பாருங்க! தயவுபண்ணுங்க!"

 அவளின் கதறலும் காயங்களும் முனுசாமியின் மனதில் இரக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்போதே, அந்த இடத்துக்கு, அந்தப் பெண் பயந்தபடி, அந்த ரௌடி வந்து, அந்தப் பெண்ணின் தலைமுடியை கொத்தாகப் பிடித்து நிறுத்தி, பளாரென அவள் கன்னத்தில் அறைந்து, இழுத்துக்கொண்டு போனான்!

 முனுசாமிக்கு, தான் அந்தப் பெண்ணின் வாக்கை நம்பாமல் தாமதம் செய்ததினால்தானே, அந்தப்பெண் ரௌடியிடம் சிக்கிக்கொண்டாள், அவளைத் தான் காப்பாற்றியிருக்கவேண்டுமோ என மனிதாபிமான எண்ணங்கள் எழுந்தன!

 இவைகளெல்லாம், பொதுவாழ்வில் சகஜமாக நடப்பவைதான் என்று எண்ணங்களை மறக்க முயற்சி செய்தான். பயனில்லாமல், அந்தப்பெண்ணின் பரிதாபமான முகமும், கதறலும், கெஞ்சலும், முனுசாமியை படாதபாடு படுத்தின!

 பர்வதம் ஒரு தீர்மானத்துடன் எழுந்து, ஒரு குடத்தில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு, ஒரு பையில் பழங்கள், பிஸ்கெட்டை போட்டுக்கொண்டு, ரஞ்சனியின் வீட்டுக்குச் சென்றாள்.

 கதவைத் தட்டினாள். திறக்கவில்லை. பல தடவை தட்டியும் திறக்கப்படாதபோது, ரஞ்சனி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.