(Reading time: 9 - 18 minutes)
Couple

காஞ்சீபுரம் போய் அத்திவரத தரிசனம் பண்ணுங்க! அவர் நாற்பது வருஷம் கழித்து வந்திருக்கார், உங்களைப் போல உள்ளவங்களுக்கு நிம்மதி தர! முடிந்தால், உங்க புருஷனையும் கூட்டிக்கிட்டுப் போங்க!"

 மரகதம் குழப்பத்தின் எல்லையில் இருந்தாள். இந்த ஜோசியர் என்ன இப்படி ரெண்டுங்கெட்டானா சொல்லிட்டாரு!

காஞ்சிபுரத்துக்கு கூப்பிட்டால், கணவன் வருவாரா?

 ஆபீஸிலிருந்து கணவன் மாலை வீடு திரும்பியதும், அவரிடம் பேசிப் பார்க்கலாம்!

 மாலை ஐந்து மணியிலிருந்து, மரகதம் கணவன் வரவை எதிர்பார்த்து வாசலுக்கும் உள்ளுக்குமாக ஷட்டில் அடித்துக்கொண்டிருந்தாள்.

 பத்மா, காலேஜிலிருந்து திரும்பி வீட்டுக்குள் நுழைந்தாள். தாயை வீட்டுவாசலிலேயே பார்த்ததும், அவளை கட்டியணைத்து முத்தமிட்டு, " அம்மா! உன் பெண்ணை யாராவது தூக்கிண்டு போயிடுவாங்களோன்னு கவலைப்பட்டு, எனக்காக வாசலிலேயே காத்திருக்கியா? ஸ்வீட் மதர்! அதுதான் நான் வந்துட்டேனே, வா உள்ளே!"

 விருப்பமின்றி, மரகதம் மகளுடன் வீட்டுக்குள் வந்தாள்!

 அதே நேரம், பார்த்திபன் ஆபீஸ் நேரம் முடிந்ததும், நேரே ஒரு ஸ்வீட் ஸ்டாலுக்குப் போய், மனைவி, மகள், மகன் மூவருக்கும் நிறைய இனிப்பு வாங்கிக்கொண்டு பிறகு மனைவிக்கு பூ வாங்கிக்கொண்டு விரைந்து வீடு திரும்பினான்.

 வீட்டுக்குள் நுழையும்போதே, குதூகலத்துடன் " மரகதம்! டார்லிங்!" என்று பிரியமுடன் அழைத்தவாறே வந்த கணவனைப் பார்த்து, மரகதம், ஒருகணம் நம்பமுடியாமல் விக்கித்தாள்!

 எதிர்பாராத இந்த திருப்பம், மகிழ்ச்சி தந்தாலும், அவளால் அதன் காரணத்தை ஊகிக்கமுடியாமையால், பூரணமாக ரசிக்கமுடியவில்லை!

 அந்தக் குறையை பார்த்திபன் தாமதமின்றி தீர்த்து வைத்தான்.

 " டார்லிங்! உன் வாக்கு பலித்துவிட்டது! காலையிலே என்னை எழுப்பும்போது, என்ன சொன்னே? ஞாபகம் இருக்கா? மேலதிகாரிகிட்ட நல்ல பெயர் வாங்கி, பிரமோஷன் வாங்கற வழியை பாருங்கன்னு சொன்னியே, வாங்கிண்டு வந்துட்டேன், பிரமோஷனை! இந்தா ஸ்வீட்! இந்தா பூ! பத்மா எங்கே? சேகர் எங்கே? அவங்களையும் ஸ்வீட் சாப்பிடச் சொல்லு!"

 மரகதம், இனிப்பு பொட்டலத்தை பிரித்து, அதில் ஒன்று எடுத்து, முதலில் கணவன் வாயில் திணித்தாள்.

 " இனிப்பான செய்தி கொண்டுவந்த உங்களுக்குத் தான், முதல் இனிப்பு!"

 அதற்குள் அங்கு வந்த பத்மா, தன் தாயை அணைத்துக்கொண்டு, " அம்மா! நான் சொல்லலே,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.