(Reading time: 9 - 18 minutes)
Couple

அப்பாவாவது, சந்யாசம் போறதாவதுன்னு! பாரு, பெண்டாட்டியை 'டார்லிங்'னு அன்பா கூப்பிட்டுக்கிட்டே, பூ கொடுக்கிற அழகை! ஏதோ ஒரு வார்த்தை தற்செயலா சொல்லிட்டா, அதை சீரியஸா எடுத்துகிட்டு இப்படியா பயப்படறது?" என்று கேட்டவாறே, கன்னத்தில் கிள்ளினாள்.

 பார்த்திபன் மகள் என்ன சொல்கிறாள் எனப் புரியாமல் விழித்தான்.

 " அப்பா! காலையிலே நீ ஏதோ வேதாந்தமா பேசினியாமே, அதைக் கேட்டு அம்மா நீ எங்கே சந்நியாசியா போயிடுவியோன்னு பயந்து நடுங்கிட்டா!"

 பார்த்திபனுக்கு நினவு வந்தது. "அதுவா? மரகதம்! யோசனை பண்ணி பார்த்தேன், மரக்கட்டையா நாம இருப்பதற்கா, ஆறு அறிவு கொண்ட மனிதனாகப் படைத்திருப்பார், கடவுள்னு நினைவு வந்தது, கூடவே, கடவுளே மனிதனாக, அதுதான் ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் எடுத்திருப்பார்னு, கேள்வி எழுந்தது! பகவத் கீதையிலே, கடவுளே அர்ஜுனை ஆயுதம் எடுத்து போர்புரின்னு சொன்னதும் நினைவுக்கு வந்தது! வாழ்வதற்காக, நம்மை, ஆண்டவன், பூமிக்கு அனுப்பியுள்ளபோது, மரக்கட்டையாக சும்மா இருப்பது அறிவீனம்னு உணர்ந்தேன். ரமண மகரிஷிகூட, புற்றிலிருந்து வெளிவந்ததும், மக்களிடையேதானே வாழ்ந்தார், பல்லாண்டு! பறவைகளையும், மிருகங்களையும் கொஞ்சி மகிழ்ந்தார் என்பதும் வரலாறு!

 அதனாலே..........."

 " நான் சொல்றேம்ப்பா! அதனாலே, அப்பாவுக்கு பிரமோஷன் கிடைத்ததை கொண்டாட, நாலுபேரும் டின்னருக்கு நட்சத்திர ஓட்டலுக்கு போறோம். ஓ.கே.?"

 " ஓ.கே." என்று அப்பா தலையசைத்ததும், சேகர் துள்ளிக் குதித்தான்.

 மரகதம், இந்த எதிர்பாராத சூழ்நிலையை நம்பமுடியாமல், பிரமித்து நின்றாள்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.