(Reading time: 7 - 14 minutes)
Broken Heart

சிறுகதை - ஐ லவ் யூ கவி - ரம்யா

ளம்மாலை சூரியன் நெற்றிசுட கண் விழித்தான் மதன்.முற்பகல்நிகழ்வுகள் மனதில் வர புன்னகைத்துக்கொண்டான்.களைப்பில் பெரியதாய் சோம்பல் முறித்து மிகவும் முயன்று எழுந்து அமர்ந்தான்த.ஏதோ பெரிய விஷயம் ஒன்று சாதித்ததாய் பெருமூசசு விட்டான்.அந்த படுக்கையறை ஒட்டிய குளியலறை கதவு திறந்தது.பனியில் குளித்த ரோஜாவாய் அவள் வெளியே வந்தாள்.அவள் அணிந்திருந்த நீலநிறப்புடவை அவளால் அழகு பெற்றிருந்தது.கண்ணாடி முன் நின்று தலை உலர்த்திக்கொண்டிருந்தவளை கண் கொட்டாமல் பார்த்திருந்தான் மதன்.

‘என்ன அழகுடீ நீ.. இப்படி என்னை கொல்லறியே’மெதுவாய் தான் சொன்னான்.சட்டென்று படுக்கையிலிருந்நு எழுந்து வந்து அவளை பின்னாலிருந்து அணைத்தான்.இதை சற்றும் எதிர்பாராதவளாய் அவன் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க போராடினாள்.

அவன் கொடுத்த காயங்கள் வலிக்க

“ஸ்ஸ்ஸ ஆ…வலிக்குது விடுங்க”என்று அவனை தள்ளி தன்னை விடுவித்து கொண்டாள்.

வெட்கத்தில் தன்னை தள்ளுவதாய் எண்ணிய அவன் அவளை இழுக்க…அவள் கண்ணில் புரண்ட கண்ணீர் கண்டு அதிர்ந்தான்.

“என்ன ஆச்சு கவி!ஏன்மா?”

நெருங்கி வந்தவனிடமிருந்து சற்று ஒதுங்கி நின்றாள்.

“ஒன்றும் இல்லை.நான் கிளம்பறேன்.மணி ஆகிடுச்சு.அத்தை வெயிட் பண்ணுவாங்க”

“ஒன்றும் இல்லையா…என்ன சொல்ற….எங்க என்னை பாரு”மெல்ல அவள் முகம் ஏந்தி பார்த்தான்.அதிர்ந்தான்.

எப்போதும் அன்று பூத்த பூவாய் இருக்கும் அவள் முகம் வாடியிருந்தது.கண்களில் கண்ணீர் ததும்ப கவலையில் தோய்ந்ததிருநதது.வெகுநேரம் அழுத சுவடுகள் அவள் முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது.

“கவி உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேனா…மன்னிச்சிடு டீ ..உன் மேல உள்ள ஆசையில கொஞ்சம் வெறித்தனமா நடந்துகிட்டேன்…மன்னிச்சிடு..இனி உன்னை மென்மையா கையாளறேன்”

அவன் காதல் மொழியை அவள் இரசிக்கவில்லை.அவனுக்கும் புரிந்தது.

“சரி நான் கிளம்பறேன்.”

“என்ன அவசரம் இப்போ?”

“அத்தை எனக்காக காத்திருப்பாங்க.கடைக்கு போகனும்.எனக்கு முகூர்த்த புடவை வாங்க”

அவசரமாக தன் உடமைகளை  எடுத்து பையில் அடைத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.