(Reading time: 7 - 14 minutes)
Broken Heart

நடை போட்டு பள்ளியறை நுழைந்தாள் கவிதா.ஆசையாய் அவளை நெருங்கி அணைத்து அவள் காதில் இரகசியம் சொன்னான் மதன்.அவள் கணவன்.

“கவி இன்று முதல் இரவு”

“இல்லைங்க இது இரண்டாவது”

அணைத்த கையை விடுவித்து கொண்டான்.

“நம்மோட முதல் இரவு அன்னியர் வீட்டில் நிர்பந்தத்தின் பேரில் அவசர நொடியில் காயங்காய் அறங்கேறியதுங்க.உடல் காயம்  மட்டுமல்ல  மனத்திலும் காயம்”

திகைத்தான்.

“கவி ஏன் இப்படி பேசற…உனக்கு உடன்பாடில்லாம நடந்தது போல சொல்லற”

வறண்ட சிரிப்பை அவன் மேல் வீசிவிட்டு

“நான் சோர்வா இருக்கேன் .ஓய்வெடுத்துக்கட்டுமா?”

அவனையறியாமல் தலையசைகத்தான்.கவி படுக்கையில் விழுந்த மறுகனம் தூங்கிப்போனாள்.

அவள் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் அவன் அந்த நாளை அசைவு போட்டான்.அழைப்பிதழ் வாங்க வந்தவளை தன் நிர்பந்தத்தின் பெயரில் அவன் நண்பன் வீடு கூட்டிச்சென்றான்.அந்த வீட்டில் யாருமில்லை என்பதே கவியின் முதல் பயம்

“என்னங்க யாருமில்ல”

“கூட்டமா இருந்து கதை பேசவா இங்க கூட்டிட்டு வந்தேன்.நம்ம இரண்டு பேர் மட்டும் இருக்க தான் இந்த ஏற்பாடு.”

“விளையாடாதீங்க…நாம போகலாம்”

“இரு கவி…உன் கிட்ட போன்ல தான் பேச முடியுது.நேரில் வந்தா எவனோ போல எதிர்ல உட்கார்ந்து பேசிட்டு போற….இங்க இப்போ உன் பக்கத்துல உன் மேல கைபோட்டு அணைச்சிகிட்டு…..”

அவன் பேச அவள் சிவந்தாள்

“என்னங்க இது….போங்க”

“இந்த மாதிரி வெட்கம் எல்லாம் கூட்டத்துல அனுபவிக்க முடியுமா”

“இன்னும் ஒரு மாசம் தானே…அப்புறம் உங்க கூடவே தான் இருக்கப்போறேன்”

“அது இருக்கு.இருந்தாலும் இதுல ஒரு கிக் இருக்கு.உன்னை பெண்பார்க்க வந்தபோதே நான் சரண்டர்.”

அவள் சிரித்தாள்.அவன் மேலும் முன்னேறினான்.

“போனமாதம் நாம நகைவாங்க போனது உனக்கு நினைவிருக்கா…அப்போ என்ன நடந்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.