(Reading time: 9 - 18 minutes)
Couple

சிறுகதை - தீர்வு உன் கையில்! - ரவை

சந்தா வேக வேகமாக காவல் நிலயம் நோக்கி நடந்தாள், புகார் கொடுக்க!

 எதிரே வந்துகொண்டிருந்த மூதாட்டி மங்களம், அவள் கண்ணில் படவில்லை!

 முதியவர்களின் சுபாவத்துக்கேற்ப, மங்களம் தடுத்து நிறுத்தினாள், வசந்தாவை!

 " பாட்டி! என்னை தடுக்காதே! நான் முக்கியமான வேலையா போய்க்கொண்டிருக்கிறேன்,........"

 " வசந்தா! நானும் கூட வருகிறேன், என் நடைக்கேற்ப, நீ கொஞ்சம் மெதுவாக நட! பேசிக்கொண்டே போகலாம்"

 வேண்டாவெறுப்புடன், வசந்தா நடையின் வேகத்தைக் குறைத்துக்கொண்டாள்.

 " இப்ப சொல்லு! வசந்தா! நீ எங்கே வேக வேகமா போயிண்டிருக்கே?"

 " காவல் நிலயத்துக்கு!"

 முதியவள் மங்களம் ஒருகணம் தடுமாறினாள்.

 " என்ன சொல்றே, போலீஸ் ஸ்டேஷனுக்கா? பொம்பளை போகிற இடமா அது? இரு இரு,நீ ஏதோ ஒரு ஆவேசத்திலே, கண்மண் தெரியாத கோபத்திலே, தப்பு பண்றியோன்னு பயமாயிருக்குடீ,ஒரு நிமிஷம்!என்ன விஷயம், யாருக்கு எதிரா புகார்னு சொல்லுடீ!"

 " எல்லாம் என் புருஷனுக்கு எதிராகத்தான்!"

 " அடிப்பாவி! குடியை கெடுத்தியே, நல்லவேளை! நான் வந்துவிட்டேன், எதுவாயிருந்தாலும், உனக்கு சந்தோஷமான முடிவு வருகிறமாதிரி, நான் அவனை மாற்றுகிறேன், இது சத்தியம்!"

 வசந்தா சற்று தளர்ந்தாள். இருவரும் அருகிலிருந்த பஸ் ஸ்டாண்டில் ஒதுங்கினர்.

 " உனக்கு இத்தனை கோபம் வருகிறமாதிரி, அப்படி என்ன செய்தான்?"

 " உன் பேரனையே போய் கேளு, அந்த வெட்கக்கேட்டை! நீ அவனை வெட்டியே போட்டிருப்பே......"

 " அவ்வளவு மோசமாவா நடந்துகிட்டான்!"

 " எவளோ ஒரு மேனாமினுக்கியை வீட்டுக்கு அழைத்துவந்து, அவளுக்கு என்னை சமைத்துப் போடச் சொல்றான், செருப்பாலேயே அடிக்கவேண்டாமா? ஆம்பிளைங்கிற திமிரிலேதானே, அப்படிச் செய்கிறான்? அதுதான், போலீஸிலே புகார் கொடுத்தால், அவங்க அவனை கவனிக்கிறபடி கவனிச்சு அனுப்புவாங்க, பாட்டி! என்னை தடுக்காதே! வழியை விடு!"

 " அடி விவரங்கெட்டவளே! நீ எதுக்காக போலீஸ்க்கு போறயோ, அங்கே அது கிடைக்காதுடீ! என்ன நடக்கும்னு சொல்றேன்!"

 " பாட்டி! நான் பத்தாவது படிச்சிருக்கேன், நீயோ பள்ளிக்கூடத்திலே மழைக்காக கூட ஒதுங்கினதில்லே, நீ எனக்கு சொல்லப் போறியா, சரி, சொல்லு! கேட்டுக்கிறேன்! எல்லாம் என் நேரம்!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.