(Reading time: 9 - 18 minutes)
Couple

 " அடி கூறுகெட்டவளே! எனக்கு படிப்பில்லைதான், ஆனா அனுபவம் இருக்குடீ! என்ன நடக்கும்னு சொல்றேன், கேளு!"

 வசந்தா மௌனமாயிருந்தாள்.

 " முதல்லே, ஒரு கேள்வி கேட்பான், போலீஸ்! 'உன் புருஷன் உன்னை அடிச்சானா? கொலை செய்துடுவேன்னு மிரட்டினானா? உன் உடம்பிலே காயம் ஏதாவது இருக்கான்னு பார்க்கணும், என்கூட அந்த தனியறைக்கு வா,'ன்னு உன்னை உடம்பிலே தொடக்கூடாத இடத்திலே எல்லாம் தொட்டு கசக்குவான்டீ! அப்புறம் கேட்பான், 'அடிதடி ஒண்ணுமில்லே, புருஷன்- பெண்சாதி தகராறுன்னா குடும்பநல கோர்ட்டுக்குப் போ'ன்னு விரட்டிடுவான்டீ, புத்திகெட்டவளே!"

 முதியவள் பேசியதைக் கேட்டதும், வசந்தா அவளுடைய பேச்சிலிருந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டாள். கண்ணில் நீர் மல்க, பாட்டியை ஏறெடுத்துப் பார்த்தாள்.

 " சரி சரி, பத்தாவது படிச்சவளே! என் வீட்டுக்கு வா! பொறுமையா உட்கார்ந்து பேசுவோம்!"

 இருவரும் முதியவளின் வீட்டை அடைந்ததும், வசந்தாவை சௌகரியமாக அமரவைத்து, தாகத்துக்கு தண்ணீர் தந்து, முதியவள் பேச்சை தொடர்ந்தாள்.

 " இப்ப சொல்லு விவரமா!"

 " பாட்டி! உன் பேரனுக்கும் எனக்கும் கல்யாணமாகி பத்து வருஷமாகியும், இன்னும் என் வயத்திலே புழு, பூச்சி வளரலேன்னு உன் பேரன் அந்த மேனாமினுக்கியை வீட்டுக்கே கூட்டிக்கிட்டு வந்து அந்த சிறுக்கிமூலமா தனக்கொரு குழந்தை பிறந்ததும், அவளை விரட்டிடறேன்னு உன் பேரன் பசப்பறான், எனக்கு தெரியாதா, அவளை உள்ளே விட்டால், என்னை வெளியே விரட்டிடுவாங்கன்னு!"

 " சரி, நீ சொல்றது ரொம்ப சரி! இப்ப நிதானமா என்ன செய்யலாம்னு யோசிப்போமா? வசந்தா! இந்த விஷயம் இருக்கே, வேலியிலே போட்ட வேட்டியைப் போல! வேகமா இழுத்தால், வேட்டி கிழிஞ்சிடுமேதவிர, வேலிக்கு ஒண்ணும் பாதிப்பில்லே, புரிஞ்சுதா?"

 " ஆமாம், பாட்டி! இதுக்கு நீயே ஒரு வழி சொல்லு, பாட்டி! என் தலைக்கு வந்திருக்கிறதை, தலைப்பாகையோட போறாப்பலே, ஏதாவது செய், பாட்டி!"

 " வசந்தா! பத்தாவது படிச்ச நீ இந்த பள்ளிக்கூடமே போகாத, இல்லை இல்லை, மழைக்குக்கூட ஒதுங்காத கிழவிகிட்ட உதவி கேட்கிறியே, அதற்கென்ன காரணம்னு யோசித்துப் பார்ப்போமா, முதல்லே,...."

 " பாட்டி! அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லே, உடனடியா நீ வீட்டுக்கு வந்து உன் பேரனுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.