(Reading time: 8 - 15 minutes)
Couple

 எனக்கு அந்தம்மா பேசியது புரியவில்லை.

 " தப்பா நினைக்காதீங்கம்மா! நீங்க என்னென்னவோ பேசறது, எனக்கு புரியலே, அதை விடுங்க! லைலாங்கிறது, இந்த வீட்டிலே யாரு? நீங்க வளர்க்கிற நாய்க்குட்டியா? நாய்க்குட்டிக்கு பசிக்குதுன்னு சொன்ன குழந்தை, பிஸ்கெட்டை தானே சாப்பிடுதே, அதுதான் எனக்குப் புரியலே...."

 " அதுவா? குழந்தை பெயர்தான் லைலா!"

 " அப்படியா! பின்னே ஏன் 'எனக்கு பசிக்குது'ன்னு சொல்லாம, 'லைலாவுக்கு பசிக்குது'ன்னு சொல்லிச்சு?"

 " அதை விளக்கத்தான் ஆரம்பிச்சேன், நீ விளங்கலேன்னு அதை விலக்கிட்டே, பரவாயில்லே, போகப் போக தெரிஞ்சுக்குவே!"

 " சரிம்மா! எனக்கு இந்த வீட்டிலே என்னென்ன வேலைன்னு சொல்லிடுங்கம்மா!"

 " தாமரை! நான் எசமானி, நீ சமையற்காரின்னு, நீயாகவே முத்திரை குத்திக்காதே! இந்த வீட்டிலே இதுவரையிலும் மூணுபேர் இருந்தோம், இப்ப நாலுபேராயிட்டோம், ஆமாம், தாமரை! நீயும் இந்த குடும்பத்திலே ஒருத்தியாகிவிட்டே! நானும் என் புருஷனும் குழந்தையும் காலையிலே எட்டு மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பி, குழந்தையை க்ரிஷிலே விட்டுவிட்டு ஆபீஸ் போயிடுவோம், சாயங்காலம் ஐந்து மணிக்கு வீடு திரும்பும்போது, குழந்தையையும் அழைச்சிகிட்டு வருவோம், பகல் முழுவதும் இந்த வீட்டை நீதான் கவனிச்சிக்கணும், மதியம் எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு அனுப்பணும், நாங்க வீடு திரும்பினதும், நீ எப்ப வேணும்னாலும் உன் வீட்டுக்கு போகலாம், காய்கறி மளிகை எல்லாம் நீயே மார்க்கெட் போய் வாங்கிவரலாம், இந்தா கேஷ்பாக்ஸ் சாவி, இது வீட்டுச் சாவி! நீ வேலைக்காரி, நான் எசமானிங்கிற பத்தாம் பசலித் தனத்தையெல்லாம் விட்டுவிடு! சரியா?"

 என்னால் அந்தம்மா சொன்னதை நம்பவே முடியவில்லை. வாயை பிளந்துகொண்டு சிலையாய் நின்றேன்.

 " என்னம்மா சொல்றீங்க? பணப்பெட்டி சாவி, வீட்டு சாவி என்னிடம் தரீங்களா? நான் இந்தக் குடும்பத்திலே ஒருத்தியா? அம்மா! என்னாலே நம்ப முடியலையேம்மா!"

 " தாமரை! சில விஷயங்களை விளக்கிச் சொன்னால்தான் உனக்குப் புரியும், இன்னிக்கி இது போதும், போகப் போக விவரமா சொல்றேன்! இப்ப சமையலைக் கவனி!"

 நான் ஏதோ கனவிலே நடப்பதுபோல உணர்ந்த நிலையில், சமையலறைக்குள் நுழைந்தேன்.

 கணவன், மனைவி இருவரும் குழந்தையிடன் வெளியே கிளம்புகிற நேரத்தில், கார் டிரைவர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.