(Reading time: 8 - 15 minutes)
Couple

வீட்டுக்குள் வந்து கார் சாவியை வாங்கிக் கொண்டான்.

 " காஜா மொகிதீன்! கொஞ்சம் நில்லு! இதோ இவங்க பெயர், தாமரை! தினமும் இவங்க உன்னிடம் எங்களுக்கு மதியம் சாப்பாடு கேரியரிலே தயாரா வைச்சிருப்பாங்க! நீதான் அதை எங்களுக்கு ஆபீஸ் வந்து கொடுக்கணும், அது மட்டுமில்லே, இப்ப எங்களை ஆபீஸிலே விட்டுவிட்டு வீடு திரும்பி வந்து இங்கே இரு. தாமரை காய்கறி, மளிகை வாங்க வெளியே போகணும்னா, அவளை காரிலே அழைச்சிகிட்டுப் போய்வா! சரியா?"

 வீட்டுக்காரம்மா பேசிக்கொண்டிருக்கும்

போதே, அவங்க புருஷன் அங்கு வந்தார். அவர் நெற்றியிலே பட்டை பட்டையாக திருநீறு! ஐயருமாதிரி பளிச்னு முகம் இருந்தது!

 அவர் என்னைப் பார்த்து " தாமரை! என் பெயர், நடராசன், இவங்க பெயர் மேரி, எங்களுக்கு கூரியர்லே தபால், பார்சல், எது வந்தாலும் நீ கையெழுத்துப் போட்டு வாங்கிவை!"

 அவர் பேசி முடிப்பதற்குள், அம்மா என்னிடம் சொன்னாங்க,

"தாமரை! காஜாவுக்கும் காலை ப்ரேக்ஃபாஸ்ட், மதியம் லஞ்ச் எல்லாம் கொடு! அவரும் நம்ம குடும்பத்திலே ஒருத்தர்!"

 மூவரும் கிளம்பிச் சென்றபிறகு, என்னால் இந்தக் குடும்பத்தைப்பற்றி ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

 எல்லோரிடமும் வித்தியாசமின்றி பழகுகிறார்கள், உணவு தருகிறார்கள், நம்பிக்கை வைத்து பணப் பெட்டியின் சாவியையே தருகிறார்கள், சமையற்காரியாக எனக்கு வெளியே போய்வர, கார்வசதி செய்கிறார்கள், உம்....ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், அவரைப் பார்த்தால் ஐயருமாதிரி தெரியுது, அம்மாவோ கிறிஸ்துவ மதம், பெயர் மேரின்னு சொன்னாரே, டிரைவரோ முஸ்லீம்! அவருக்கும் இந்த வீட்டில் உணவு!

 அப்பப்பா! ரொம்பவே வித்தியாசமான குடும்பம்!

 அந்த அம்மா ஏதோ சொல்ல வந்தாங்க, குழந்தை ஏன் 'எனக்கு'ன்னு சொல்லாமல், 'லைலாவுக்கு'ன்னு சொல்லிச்சுங்கிறதை விளக்க வந்தாங்க, நான்தான் புத்தி கெட்டுப்போய், புரியலேன்னு சொல்லிட்டேன், மறுபடியும் எப்போதாவது ஓய்வு நேரத்திலே பேசுகிறபோது, கேட்கணும் அவங்களிடம் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

 என்னை அதிக நாட்கள் காக்கவைக்கவில்லை, மேரிம்மா!

 " தாமரை! இன்னும் பத்து நாட்களிலே, தீபாவளி பண்டிகை வருது, நீ அன்று உன் புருஷன், குழந்தையை கூட்டிக்கிட்டு இங்கே வந்துவிடு, எல்லோருமா சேர்ந்து பண்டிகையை ஜாலியா கொண்டாடலாம், உம்....மறக்காம, நம்ம வீட்டிலிருந்து பணத்தை எடுத்துக்கிட்டு காரிலே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.