(Reading time: 9 - 18 minutes)
Couple

என்னால் சகித்துக்கொள்ள முடியுமா?"

 " பத்மா! இவ்வளவுதானே! அவனை உன்னிடம் மன்னிப்பு கேட்கச் சொல்கிறேன், போதுமா?"

 " ஐயா! நீங்களா இப்படி பேசுவது? இவ்வளவுதானா என்று எனக்கேற்பட்ட அவமானத்தை அலட்சியப்படுத்துகிறீர்கள்?"

 " நோ நோ! இப்படி நடப்பது இந்த துறையிலே சகஜம்னு சொல்லவந்தேன்...."

 " உங்களுக்கே இப்படிப் பேச அவமானமாக இல்லை? தவறு நடந்தால், அதை திருத்தி நல்வழிக்கு கொண்டுவரணுமே தவிர, தவறை சகஜமாக்கக்கூடாது என்கிறேன்.........."

 " சரி, இதற்கொரு தீர்வை நீயே சொல்லு!"

 " அதைத்தானே இவ்வளவு நேரமாக சொல்லிக் கொண்டிருக்கிறேன்......"

 " பத்மா! நானும் குமாருடன் சேர்ந்து மன்னிப்புக் கேட்கட்டுமா? இருநூறு கோடி மேலும் செலவு செய்ய என்னால் முடியாதும்மா! ப்ளீஸ்!"

 " என் வாழ்க்கை முழுவதும் சம்பளம் இல்லாமல், உங்க படங்களிலே நடித்து தருகிறேன், ஒரு படத்திலேயே முந்நூறு கோடி சம்பாதிப்பவர், நீங்கள்!"

 " அதெல்லாம் சரி, நீ யோசிக்க ஒருநாள் அவகாசம் தரேன், நாளை உன் சம்மதம் தெரிவி! நான் வரட்டுமா?"

 அதற்குத்தான் நிருபமாவுக்கு அத்தனை கோபம்!

 அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்த தாமோதரனை அவருடைய மானேஜர் தொட்டு எழுப்பி வெளியே அழைத்துச் சென்றார்.

 நிருபமா தன் அறையில் பொறுமிக் கொண்டிருந்தாள்.

 " பெண்களின் உடலுக்காக அலையும் தெருநாய்கள்! அவர்களுக்கு துணைபோகும் துச்சாதனர்கள்! .......தவறை திருத்த முயலாமல் அதையே சகஜமாக்குகிற மேல்தட்டு பெரிய மனிதர்கள்! ......இப்படியெல்லாம் பணம் சேர்க்கவேண்டுமா? த்தூ!"

 நிருபமாவின் செகரடரி கதவைத் தட்டி குரல் கொடுத்தார்.

 " ஆடிட்டர் வந்திருக்கிறார்........"

 " அவரை உட்காரச் சொல்லி, குடிக்க காபி கொடுங்க! பத்து நிமிஷத்திலே வரேன்......."

 முகம் கழுவி புது மனுஷியாக வந்த நிருபமாவை பார்த்த அவளுடைய செகரடரி, " இது நடிப்பா? அல்லது தயாரிப்பாளரிடம் கோபமாகப் பேசினது நடிப்பா?" எனப் புரியாமல் திகைத்தார்.

 " வணக்கம்மா!"

 " வாங்க, வாங்க! ரொம்ப நேரமா காத்திருக்கீங்களோ, சாரி!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.