(Reading time: 9 - 18 minutes)
Couple

 " அதெல்லாம் ஒண்ணுமில்லே, உங்க வரவு-செலவு கணக்குகளை சரிபார்த்தேன், நீங்க கொஞ்சங்கூட மாறுதல் இல்லாமல், வரவு-செலவை உண்மையாக எழுதிவைத்து, எக்கச்சக்கமா வருமானவரி கட்டுறீங்கம்மா! அப்படி எவருமே இந்தநாட்களில் உண்மையா நடப்பதேயில்லேம்மா! நான் சொல்றதை கேளுங்க! ஒரு கோடி ரூபாய்க்கு மேலே வரியை குறைத்துக் கட்டுகிற மாதிரி, கணக்கை சரிசெய்து தரேன், சரியா?"

 நிருபமா சிரித்தாள்.

 " ஏன் சிரிக்கிறீங்கம்மா?"

 " ஆடிட்டர் சார்! உங்க தொழிலே, தவறு செய்கிறவங்களை திருத்தி, அரசாங்கத்துக்கு சேரவேண்டிய பணத்தை ஒழுங்காக சேர்ப்பிக்க வேண்டியது, இப்படி நீங்களே, ஒழுங்கா கணக்கு காட்டறவங்களைக்கூட தவறான வழியிலே செல்ல தூண்டலாமா?"

 " நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கம்மா! அரசாங்கமே சில சலுகைகளை சட்டப்படியே தந்திருக்காங்க, அவைகளை பயன்படுத்தி வரிப் பணத்தை குறைக்கலாமேன்னுதான் சொன்னேன்........."

 " ஆடிட்டர் சார்! சட்டப்படி சலுகைகள் அதற்கு தகுதியானவர்களுக்கு தந்திருக்கிறார்கள். மத்தியதரவர்க்க ஆபீஸில் வேலை செய்து மாத சம்பளம் வாங்குபவர்களின் வரிப்பணத்தை முதலாளியே சம்பளத்தில் பிடித்துக்கொண்டு அரசாங்கத்துக்கு செலுத்துவதால், அவர்களுக்காக வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, இன்ஷ்யூரன்ஸ் பிரிமீயம் செலவுகளை ஈடுசெய்ய தரப்பட்ட சலுகைகளை, முழுநேர தொழில்முறை நடிகை நான் பயன்படுத்திக்கொள்வது, தவறில்லையா? அப்படி குறுக்குவழியில் சேமிக்கிற பணம் நமக்கு ஒருநாளும் நல்லது தராது, தீராத நோயைத் தந்து எத்தனை செலவு செய்தாலும், குணமடையாமல், காலமெல்லாம் படுக்கையிலே தள்ளிவிடும், எனக்கு அப்படி ஒருநிலை வரவேண்டாமே!"

 " மை காட்! நீங்க நிறைய படித்து சட்டம், உலகநடப்பு எல்லாம் தெரிந்து வைச்சிருக்கீங்களே!"

 " ஆடிட்டர் சார்! ஒரு விஷயம் சொல்றேன், தப்பா எடுத்துக்காதீங்க! இன்றைய சமூகத்திலே அரசுக்கு வரி கட்டுவதைப் பற்றி ஒரு தவறான கண்ணோட்டம் நிலவுகிறது, ஏமாற்றியாவது வரி தராமல் தப்பிக்கவேண்டும் என்பதை நடைமுறையில் ஒரு கலையாகவே மாற்றிவிட்டார்கள்! அதற்கு உங்களைப் போன்ற ஆடிட்டர்கள் கறுப்புப் பணம் பெற்றுக்கொண்டு உடந்தையாகி விட்டீர்கள்! ...."

 " நான் வரேம்மா......"

 " ஒரு நிமிஷம்! நான் என்னவோ என் பணத்தை யாருக்கோ தருவதுபோல, வரி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.