Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
சிறுகதை - பிறந்த நாள் - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

சிறுகதை - பிறந்த நாள் - சசிரேகா

க்டோபர் 2, வருடம் 1995

வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு பையன் பிறந்திருக்கான்என நர்ஸ் சொன்னதும் மகாதேவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கண்களில் சட்டென ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. கையெடுத்து கும்பிட்டார் தன் கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு, எதிரில் இருந்த நர்ஸோ

உள்ள போய் பாருங்க சார்என சொல்லிவிட்டு சென்றுவிட மகாதேவனும் தன் மகனைக் காண ஆர்வமாக அறைக்குள் சென்றார், அங்கு அவரது மனைவி சுசீலா சோர்வாக படுத்திருந்தார், அவர் பக்கத்திலேயே சிறு குழந்தையை படுக்க வைத்திருந்தார்கள். சுசீலாவையும் குழந்தையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே நெருங்கி சென்று நின்றார்.

சின்ன குழந்தை கண்கள் கூட திறவாமல் இறுக்கமாக மூடிக்கொண்டு கையை மட்டும் அசைத்தது அதைக்கண்டு புன்னகை பூத்தபடியே அந்த பிஞ்சு கரத்தை தனது விரலால் வருட அக்குழந்தை சிலிர்த்தது உடல் அசைக்கவும் அவருக்கு பெருமையாக இருந்தது.

தனது மனைவியை அன்பாக பார்த்தார். சுசீலாவும் அவரைக்கண்டு சிரித்தார்

எப்படியிருக்க சுசீலா

நான் நல்லாயிருக்கேன்

நமக்கு பையன் பிறந்திருக்கான்என உற்சாகத்துடன் சொல்ல சுசீலாவோ பதில் சொல்லாமல் சிரித்தபடியே தலையை ஆம் என்பது போல் தலையை ஆட்டினார்.

இவனைப் பாரேன் எப்படியிருக்கான்னுஎன மகனை பார்த்தபடியே சொல்ல

உங்களை போலவே இருக்கான்

இல்லை இவன் என்னைப் போல வேணாம்

ஏன் அப்படி சொல்றீங்கஎன அதிர்ச்சியுடன் கேட்டவளிடம்

இதுவரைக்கும் என் வாழ்க்கையில நான் வெற்றியையே பார்க்கலையே சுசீலா, எங்க போனாலும் ஏதாவது ஒரு பிரச்சனையில வசமா மாட்டிக்கிறேன், வீட்டையும் சரியா பார்க்க முடியலை வேலை வேலைன்னு ஓட வேண்டியதாயிருக்கு, என்னதான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சாலும் அதுக்கான அங்கீகாரம் கிடைக்கலையே, வருமானம் குறைவு இப்பவே நாம கஷ்டத்தில இருக்கோம், எப்படி குழந்தையை பார்த்துக்கப் போறேன்னு தெரியலை, வெளி உலகம் என்னை விரட்டிக்கிட்டே இருக்குது சுசீலா

நீங்க ஒரு அப்பாவி யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி ஏமாந்துப் போறீங்க, எல்லாருக்கும் உதவி செய்ய முன் வர்றீங்க, உங்க உதவியை வாங்கினவங்க உங்களை

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: சிறுகதை - பிறந்த நாள் - சசிரேகாJeba 2019-11-07 13:35
Good story sisy... Different one. Azhagana nadai ariya vendiya karuporul.. Supe :thnkx: :clap: r.. Well done
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - பிறந்த நாள் - சசிரேகாAdharvJo 2019-11-07 12:43
nice story sasi ma'am :clap: :clap: Poor boy oru pera vachi ethai advice facepalm Gandhi-ndra name vechavanga mattum avarai pole irukanumnu no rule...everyone can follow and live an exemplary life :yes:

Thank you!!
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - பிறந்த நாள் - சசிரேகாதீபக் 2019-11-07 10:24
wow Really a sema story sis :clap: . :hatsoff: of this story good message said in this story. :thnkx: for this wonderful story :-) .
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - பிறந்த நாள் - சசிரேகாரவை.l 2019-11-07 07:07
Sasimma! உன் பெயரோடு 'அம்மா'வைச் சேர்த்தது மிகப் பொருத்தம் என்பதை இந்தக் கதை நிரூபித்துவிட்டது! வாவ்! ரொம்பவே வித்தியாசமான கதை! அவசியமான கதை! அற்புதமான கதை! காதலித்த பெண் சொன்ன காரணம், பெயர் மாற்றப் பதிவாளர் கூறிய விளக்கம், பொதுமக்களின் சீண்டுதல் எல்லாமே சுபர்ப்! மனமார்ந்த பாராட்டும் வாழ்த்தும்! இன்று பொழுது நல்லவிதமாக மலர்ந்துள்ளது!
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - பிறந்த நாள் - சசிரேகாmadhumathi9 2019-11-07 05:20
:clap: arumaiyana kathai sasi wow :clap: (y) vaaltugal. :-) :thnkx: 4 this story. :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top