(Reading time: 11 - 21 minutes)

சிறுகதை - உனக்கோர் கடிதம் தோழி - ரம்யா

னிமையானதொரு காலைநேரம்.  இடியும் மின்னலுமாய் ஆர்ப்பரிந்துவிட்டு மேகங்கள் தஙகளுள் சமரசம்செய்துகொண்டு தூரல் தூவ ஆரம்பித்தது.  அழகாய் மெல்லியதாய் சீராய் சலனமில்லாமல் மழை பொழிந்தது. இந்த இதமான சாரலை யார்தான் இரசிக்கமாட்டார்கள். அதுவும் ஜன்னல் ஓரம் சூடானதேனீர் இளையராஜாவின் மெல்லிசை…மனத்திலும் மழை தான். அப்படி தான் பாரதியும் ஜன்னல் சாரலில் நனைந்தபடி தேநீர் கோப்பையுடன் அமர்ந்திருந்தாள். இந்த மாதிரி ஒருசூழல் தான் அவள் பெரிதும் விரும்புவதுகாலையில் ப்ம்பரமாய் சுழன்று கணவன் குழந்தைகள் கவனித்தபின் தனக்கான நேரமாய் செலவிடும் சில மணித்துளிகள். அதிலும் அவள் பெரிதும் நேசிக்கும் மழைநாள்… ஜன்னல் சாரல்.. மெலல்லிசை.

அவள் முகத்தில் ஏதோ ஒரு நிறைவு. ஒரு சந்தோஷம். சிறு வருத்தம். அவள் மீன் போன்ற கண்ஓரத்தில் ஒரு சிறுதுளி . நெஞ்சுக்குள் எதையோ மென்றுவிழுங்கினாள். ஜன்னல் ஒட்டி போடப பட்ட மேஜையின் மேல் படபடக்கும் காகிதங்கள்.  அப்போது தான் பேனாவால் ஈரமாக்கப்பட்ட எழுத்துக்கள் காற்றில் உலர்த்திக்கொண்டிருந்தது. யாரை நோக்கி பறக்க ஆயத்தமாகின்றன இந்த காகித புறாக்கள்?  பாரதியின் கண்ணீர் துளியின் காரணம் தான் என்ன? ஆனால் அவள் முகத்தில் ஏதோ அமைதி. தன் பாரங்களை இந்த காகிதத்தில் இறகக்இ தன் கண்ணீர் துளியால் முற்றுப்புள்ளி வைகக்இறாள் போலும்.

பிறர் கடிதம் படிபப்து அநாகரீகம் தான். ஆனால் பாரதி நம்மவள் அவள் உள்ளம் உறுத்தியது எது. இன்று அமைதியும் பாரமும் ஒன்றாக ஏன அறிய வேண்டாமா. படபடக்கும் அந்த காகிதத்தைசற்று நிறுத்தி படிக்கமுயல்வோம்.

என் அன்புத்தோழிக்கு

என் உயிர் சிநேகித்திக்கு

ப்ரியமான வள்ளிக்கு

இந்த கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை எனக்கு. நீ இன்னமும் என் தோழியா? என் மீது உனக்கு பிரியம் உள்ளதா? தெரியவில்லை ஆனால் இன்னமும் நான் உன்னை சிநேகிக்கிறேன் வள்ளி. என் மனத்தில் இழைந்துபோன ஒரு உருவம் நீ. நேற்றே உன்னை கோயிலில் பார்த்த போது என்னையறியாமல் ஒரு உற்சாகம்.  உஅனை கடட்யணைக்க ஓடி வந்தேன். ஆனால் உன் கண்ணில் அந்த நட்பு இல்லை மாறாக ஒருகுழப்பம் கலக்கம்.. ஏன…எஅ வளள்இயை நான் பார்க்கவில்லை. பொங்கிய அன்பிற்கு தடையிட்டேன். உன்னைப்போலவே நானும் சமப்பிதாய கேள்விகளோடு விடைபெற்றேன்.

வீடு திரும்பிய எனக்கு உறுத்தல். எத்தனை ஆண்டுகள் ஏறத்தாழ இருபது வருடம் பின்பு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.