(Reading time: 11 - 21 minutes)

கல்லூரி சேர துணிந்தேன். விடுதி சேர விரும்பினேன். ஆழமான் அழகான நம் நட்பு வட்டாரத்துள் எத்தனைபேரை இணைத்திருந்தோம். எத்தனை பேர் சுற்றியிருந்தாலும் உன் ஒருத்திக்கு தான் என் உண்மை உள்ளம் திறப்பேன். இதை நீ அன்று அறியவில்லை. ”நீ மாறிவிட்டாய் பாரதி”என்று எத்தனையோ முறை சொல்லிவிட்டாய். முள்ளாய் தைத்தது வள்ளி.

கல்லூரி விழாக்களிலோ தேர்வுகளிலோ உன்னை மிஞ்ச வேண்டும் என று எண்ணியதும் இல்லை. அப்படி ஆனதில் என் தவறும் இல்லை. அதில் நீ ஏன் இரணப்பட்டாய் வள்ளி. இதனாலேயே பல விஷயங்களில் தள்ளிபயணித்தேன். உன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தேன். பள்ளியில் உன் வெற்றியில் நான் அருகில் இருந்தேன்.. கல்லூரியில் என் வெற்றியில் தனாயானேன். நான் மாறித்தான் போய்விட்டேனோ என்று புழுங்கினேன்.

துவண்டு விழும் போதெல்லாம் தோள் கொடுத்த தோழி நீ ஆனால் ஏனோ சிலசமயம் நான் துவண்டு விழவும் காரணமானாய். பாடல் பட பாடிய போதும் பதக்கம் சில வாங்கிய போதும் உன் கைதட்டலுக்கும் உன் அணைப்புக்குமாய் ஏங்கும் என் உள்ளம். ஏனோ அது குறைநத்தும் போறது. பின் காணாமலும் போனது.

உன் நண்பனுடன் என் முதல் காதல் பூத்தபோது உன்னைத்தேடி தான் சொல்ல வந்தேன். விடுமுறையன்று நீ வீடும் செல்லவில்லை விடுதியிலும் காணவில்லை.  தவிப்பின் உச்சத்தில் இருந்த மறுநாள் காலையில் சற்று கூடுதலாய் தான் பேசிவிட்டேன்.. பிளவு பெரிதாகும் என்று புரியாமல். தப்பேதும் செய்யமாட்டாய் ஆனால் உன் கூடா நட்பு ஒன்று தகித்ததடி அன்று.

சிட்டெரிக்கும் பார்வையோடும் சுடுபார்வை ஒன்றினோடும் பிரிந்துவிட்டாய். பரிதவித்து போனேன். அன்றும் பின்னரும் என் கண்ணீர் நனைத்த தலையனைக்கு மட்டுமே என் சோகம் தெரியும்.  இயல்பாய் பழக எத்தனை நாள் முயன்று விட்டேன். பதிலேதும் பேசாமல் மௌனத்தில் எனை வதைத்தாய். உனக்கென்று ஒரு உலகம் தனியாய் உருவாக்கி கொண்டாய்.

தனிமையின் கொடுமையில் ஆறுதவாய் நின்ற ரவி உன் நண்பன் என் காதலன் எத்தனை தூது வந்திருந்தார். என்னை வெறுக்க காரணம் என்ன என்ற குழப்பத்தில் குறுகினேன். உன் காலில் மண்டியிட்டு மன்னிப்பும் கேட்டுவிட்டேன். அன்னையாய் எத்தனை முறை தலைகோதி விட்டிருப்பாய். என் மன்னிப்பு ஏற்று ஒரு முறுவல் தந்திருந்தால்என்றோ முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் நம் பிரிவிற்கு. என் அருகாமை தான் உன் இரணம் என்று உன்னை விலகியே பயணித்தேன். ஆனாலும் உன்னை போல உற்ற தோழி இன்று வரை வாய்க்கவில்லை வள்ளி. கூண்டுகிளியானேன். இறக்கை விரிக்க மறுத்துவிட்டேனீ. உன் வெற்றியின் ஒவ்வொரு நிமிடமும் என் மனம் மகிழ்ந்திருந்தேன். இழந்த உன் புன்னகையை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.