(Reading time: 11 - 21 minutes)

மீண்டும் கண்டேன். துள்ளி ஓடும் நதியாய் என் வள்ளி உலா வர பரவசப்பட்டேன்.

வள்ளி!என் பிரிவில்  உனக்கொரு நன்மை என்றால் உன்னை பிரியவும் தயங்கமாட்டேன்.

வள்ளி நம் பார்வதி அத்தை நினைவிருக்கிறதா. நம்மை சீண்டிவிட்டு சிணுங்கலில் சிரிக்கும் சில்மிஷக்காரி. ஒருமுறை நாம் ஒன்றாய் கூட்டாஞ்சோறு விளையாட அந்த பக்கம் வந்த அத்தௌ ‘சோற் ஆக்கி யாருக்கு ஊட்டப்போறீக’என்றாள் கிண்டலாக. அறியாத பருவத்தில் நாம் சொன்னோம் ‘எனக்கு அவ அவளுக்கு நான’கலகலவென சிரித்த அத்தை ‘அது சரி அப்போ ஒரே புருஷனயா கட்டப்போறீங்க…வேற வேற வீடு போன என்ன செய்விக’என்றாள். அவள் பேசியதில் என்ன புரிந்ததோ நாம் பிரியக்கூடும் என்று மட்டும் புரிந்தது. அநத நினைப்பில் அழுது புலம்பினோம். இரவோடு இரவாக எங்காவது போவோமா.. இல்லை பாழும் கிணற்றில் பாய்ந்து விழுவோமா கல்யாணம் கட்டாமல் சந்நியாசி ஆவோமா எத்தனை திட்டங்கள் தீட்டினோம். கடைசியாக ஒரு வீட்டல் மறுமகள் ஆகும் பட்சத்தில் தான் கல்யாணத்திற்கு சம்மதிப்போம் என்று தீர்மாணம் போட்டோம். எத்தனை இனிமையான நாட்கள்.

இந்த நிகழ்வையும் இன்னம் எத்தனையோ ரவியிடம் பகிர்ந்திருக்கிறேன். அப்போதெல்லாம் வள்ளியை தாண்டி யோசிக்க தெரியாதா என்று கிண்டலாய் கேட்பார். ஆனால் உண்மையில் நீ இல்லாத ஒரு நிகழ்வும் என் வாழ்வில் இல்லை வள்ளி. பல இன்ப நிகழ்வுகள் சில கசப்பான நிகழ்வுகள். உன்னை சநதிக்கும் அன்று ஒன்று மட்டும் கேட்க நினைத்தேன். ”வள்ளி நான் துரோகியா! இன்னமும் அபப்டி நினைக்கிறாயா”

தனிதனித்தடமாய் நாம் பயணித்த போதிலும் உன் அருகாமை  போதுமென எண்ணியிருந்தேன். உன்னைவிட்டு இத்தனை தூரம் விலக முடிவெடுத்தது அனறு தான். நம் கல்லாரியின் இறுதி நாள். நம் பிரிவின் முதல் நாள். இனிய நினைவுகள் மட்டும் சுமந்து மௌனமாய் பிரிய நினைத்தேன். ஆனால் வேரோடு சாய்க்கும் காட்டாறு வெள்ளமாய் உன் ஒற்றை வார்த்தை என்னை தூக்கி எறிந்தது வள்ளி.

“கூடவே இருந்து குழி பறித்து முதுகில் குத்திய துரோகி.. இனி உன் நிழல் கூட சீண்டமாட்டேன்” உன் குரலில் அந்த வார்த்தைகள் இப்போதும் என் காதில் எதிரொலிததால் நெஞ்சு பிழிகிறது உடம்பெல்லாம் தகிக்கிறது உயிர் உறுத்துகிறது. என்ன செய தேன் என்று அன்று புரியவில்லை.  ஆனால் என் வள்ளி என்னை இத்தனை வெறுக்க நடந்து கொண்டேன் என்று மட்டும் புரிந்தது. இனி உன்னை இம்சிக்கலாகாது என நிரந்தரமாய் பிரிய முடிவெடுத்தேன். என் காதல் என்னை தடுத்திராவிட்டல் என்றோ முடிந்திருக்கும் என் கதை. பிரிந்த அன்று முதல் உன்னைப்பறறி கேள்வியிலேயே நிம்மதி அடைந்தேன். பல வழிகளில் உன் தொடர்பு அறுக்காமல் இருக்க பாடுபட்டேன். என்றேனும் உன்னை மீண்டும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.