சந்தித்தோம். அடையாளமும் கண்டுகொண்டோம். பின்பு ஏன் விலகி நின்றோம். என் மனத்தின் ஏக்கம் உனக்கில்லையா. இதயம் கனக்குதடி வள்ளி. இரட்டை ஜடை மயில் நீ. நீ சிரிகக்உம்போது கண்கள் மின்னும். உன் தாவணி உன் மேல் பட்டதாலேயே காற்றில் ஆனந்த கூத்தாடும். உன்னை சுறற்இ எப்போதுமே சிரிப்பொலி பொலிவு. உன் நட்புக்காக உன் அருகாமைக்காக பலர் காத்திருக்க நீ என் கை கோர்த்து என்தோளில் கை போட்டு என்பாரதி என்று நடக்க என்னுள் எத்தனை மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் தெரியுமா. இன்றும் நான் அதே பாரதி தான் வள்ளி.
என்று தொடங்கியது நம் நட்பு. ஒரே ஊரில் ஒரே நாளில் ஒரே இடத்தில் பிறந்த அன்றா? உன் அன்னையும் என் அன்னையும் வித்தியாசம் பாராமல் நம்மை வளர்த்த விதத்திலா? பள்ளி முதல் நாள தொடங்கி அன்று பிரிய நேர்ந்தது வரை எல்லாவற்றிலும் பயணித்த போதா? விளங்கவில்லை. ஆனால் நம் பிரிவுக்கு பின்னும் உன கைக்கோர்க்க உன் தோழியாக ஏங்கிய ஏக்கம் இன்றுவரை இன்னமும என் நெஞ்சில் கனன்று கொணட்டிருகக்இறது வள்ளி.
விவரம் அறியா வயதில் சிறுசிறு சணடைகள் மூண்டாலும் அதிலிருந்து நம்மை மீட்டு மீண்டும் திடமாய் நாம் கட்டிக்கொண்ட நட்புக்கோட்டை இனறு ஆளில்லாமல் வெறும் கூடாய் கிட்க்கிறது. இன்று விவரங்கள் பல அறிகிறோம்.. ஒற்றை வார்த்தையிலேயே நம் இடைவெளி குறையக்கூடும் ஆனால் ஏனோ மௌனமாய் அலைகிறோம்.
உனக்கு நினைவிருக்கிறதா வள்ளி…பள்ளி செல லும் போதும் வீடு திரும்பும் போதும் நம் கைக்கோர்த்துக்கொண்டு அந்தசின்ன பாலம் கடப்போம். வழியில் தெரியும் காட்டுப்பூக்களை உனக்காக நானும் எனக்காக நீயும் பறித்துக்கொடுப்போம். நமக்குள் சண்டைகள் மூண்டாலும் மதிய உணவு மட்டும் நாம் தனியாக உண்போம். எத்தனையோ முறை நம் சண்டைகள் சமாதானமானது அப்போது தான். உன் பலத்தையும் என் பலத்தையும் ஒப்பிட்டு மகிழ்ந்தோம். உனக்காக நான் பாடுவதும் அதற்கு நீ ஆடுவதும் கண்டு பொறாமை அடைந்தோர் பலர். ஆனால் அவர்களால் நம்மை பிரிக்க இயன்றதில்லை.
நம் ஒறுறுமை பார்த்து ஊரே சிரித்தது அன்று தான். ஆம் நாம் இருவரும் பெரிய மனுஷி ஆன ஆன்று. அன்று நமக்கு இருந்த தனிமையில் நாம் அடித்த வம்புகள் ஆறுதல் சொல்லிக்கொணட் வலியான பொழுதுகள் என்றும்நெஞச்சில் நிற்கும் வள்ளி நீ வேறு நான் வேறு என்று என்றுமே எனக்கு தோன்றியதில்லை. உன் நிழல் நான் என் நிழல் நீ என்று தான் நினைதத்இருந்தேன்.
நிழல் கூட பிரியும்இருடட்உ ஒன்று வருமென விளங்கவில்லை அன்று. இருளாய் வ்நததது நம் கல்லூரி நாட்கள். வீடு தாண்டி நாம் எடுத்து வைத்த முதல் அடி. நீ இருக்கும் பலதத்இலேயே