பெறுவேன் என்ற நம்பிக்கையில். நீ உன் குடும்பத்தோடு இடம் பெயர்ந்தது முதல் அதுவும் அறுந்து போனது. காதல் கணவன் கை சேரும் நேரம் கூட உன் காலடி சத்தம் கேட்காதா என்று ஏங்கினேன்.
அழகான ரோஜா செடியாய் வளர்ந்த நம்நட்பில் நான் ஏன் முள்ளானேன் என று புரியாமல் குழம்பினேன். நான் உனக்கு துரோகி ஆனதின் காரணம் அறிந்தபோது பதறிப்போனேன். உன் வாழ்க்கையை நான் வாழ்வதாய் குறுகிப்போனேன். பல சமயம் என் காதலையும் கசககி காயப்படுத்தினேன். பல முறை இந்த காலம் பின் நோக்கி நகராதா? நம் கல்லூரி வாழ்க்கை திருப்பி எழுத திருதத்இ எழுத முடியாதா என்று ஏங்கினேன். தவித்தேன்.
வெகுநாட்கள் கழித்து உன்னைப்பற்றி அறிந்த போது மகிழ்சசியின் உசச்ம் தொட்டேன். என் வள்ளி இன்று நாடே புகழும் ஒரு கல்வியாளர், நடனப்பள்ளி தாளாளர். உன் வளரச்சியில் என் மனம் கனிகிறது வள்ளி. ஆயிராமாயிரம் பேர் உனனை பாராட்டும் போது உன் விடாமுயற்ச்சியை பேசும போது என் உசச்இ குளிர்கிறது. நெஞ்சு நிறைகிறது. உன்னை ஆரத்தழுவி உச்சி முகர கூத்தாடுகிறது என் மனது.
நம் இருபது வருட நட்பை ஒஉ மூனறு வருட நிகழ்வுகளால் உருமாறற் முடியவில்லை வள்ளி. இன்றும் என்றுமு நான் உன தோழி உன் பாரதி தான். நீ என் வள்ளி தான். நான் உன்னில் ஏற்படுத்திய காயங்களுக்கு மன்னிப்பு கேட்கிறேன் வள்ளி. என்னை மன்னித்து விடு
மன்னித்து விடு
மன்னித்து விடு
நீ மறுமுறை என்னை ஏற்பது உன் விருப்பம். ஆனால் மறுமுறை உனை கண்டால் ஒற்றை புன்னகையுடன் ஓமாகச்செல்ல விரும்புகிறேன். யாரோ மூன்றாமவர் போல சம்பிரதாய வார்த்தைகள் என்னை கொல்லுகிறது வள்ளி. உன் முகம் பார்த்து அந்த புன்னகை போதும். உன் வளர்ச்சி பறற்இய விஷயஙகள் எனக்கு போதும். என்றும் நீங்காத நம் நினைவுகள் அது மட்டும் போதும்.
இன்றும் என் அருகாமை உஅனை காயப்படுத்துமானால் உன்னை விட்டு விலகியே நிற்பேன். ஆனாலும் உன்னைப போல உற்ற தோழி இதுவரை வாய்க்கவில்லை வள்ளி. நீ வளர்ச்சிகள் மேன்மேலும் பெற என்றும் வாழ்த்தி நிற்பேன். வாழ்த்துக்கள் வள்ளி.
_ உன் பாரதி
பி. கு. என் மகளின் பெயர் வள்ளி..
கண்மூடி நின்றிருந்தாள் பாரதி. அழகான தழுவலால் அவள் தவம் கலைத்தான் ரவி. அவன் நெஞ்சில் சாய்ந்து தான் எழுதிய கடிதத்தையே பார்த்து ஏக்கப்பெருமூச்சு வெளியேற்றினாள். ஆதரவாய் தோள்குலுக்கி வழக்கம் போல் நம்பிக்கை புன்னகை பூத்தான் ரவி.
இந்த கடிதம் வள்ளி கையில் சேருமா? அவள் மனநிலை என்னவாக இருக்கும்? மறுமுறை இவர்கள் சந்திப்பில் விளங்கிவிடும். அந்த சந்திப்புக்காக நாமும் காத்திருப்போம்.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.