(Reading time: 9 - 17 minutes)

" ஒண்ணுதான், ஒண்ணேஒண்ணுதான் கேட்டிருக்கேன், தாத்தா! உனக்கேன் அதில் சந்தேகம்?"

 " நான் சொல்றேன், ரெண்டு கேள்வி கேட்டிருக்கே! அப்படி கேட்கிறதுதான் நியாயமும்கூட........"

 " ரெண்டா?"

 " சொல்றேன், முதல் கேள்வி, தயாரித்து வெளியே நம்மை பூமிக்கு அனுப்பும்போதே, நம்ம காலாவதி நாளை ஆண்டவன் குறித்தானா இல்லையா? ரெண்டாவது கேள்வி, அப்படி குறித்திருந்தால் நமக்கு தெரியும்படியா குறிக்கலையே, ஏன்? சரியா?"

 "தாத்தா! யு ஆர் கிரேட்!" என ஓடிவந்து, தாத்தாவை கட்டிக்கொண்டான்.

 " சரவணா! உனக்கு தெரிந்து கேட்டது ரெண்டு கேள்விகள்! ஆனா அந்தக் கேள்விகளை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாதே!"

 " ஏன் தாத்தா?"

 " மருந்து என்று ஒன்று, தயாரிக்கப்படுவதற்கு பல ரசாயனங்களின் சேர்க்கை அவசியம், இல்லையா? அந்த ரசாயனங்களை எதிலிருந்து எப்படி தயாரித்தார்கள், வேறு யாரோ தயாரித்ததை சேர்க்கிறார்களா, அல்லது அதையும் இந்த மருந்து தயாரிப்பாளரே தயாரிக்கிறாரா என்பதையெல்லாம் பற்றி நாம் கவலைப்படுகிறோமா? ஒட்டுமொத்தமாக, மருந்து என்ற உருவில் வெளியே அனுப்பப்படுவதை நாம் அப்படியே நம்பிக்கையுடன் ஏற்கிறோமே இல்லையா, அதுபோல, கடவுள்னு ஒரு சக்தி எங்கேயோ இருக்கு, அதுதான் நம்மை படைக்கிறது, நம்மை படைத்தது போலவே பூமின்னு ஒண்ணை படைத்து, அந்த பூமிக்கு தான் படைத்த உயிர்களை அனுப்புகிறது என்றெல்லாம் யுகயுகமா நமக்கு பெரியவங்க சொல்லிக் கொடுத்ததை நம்புகிறோம்.

அந்தப் பெரியவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் மேலே விசாரணை மேற்கொள்வது தப்பில்லையா? அதனாலே முதல்லே, நம்ம பெரியவங்க சொன்னது சரிதானா, ஏன் அப்படி சொன்னவங்க நீ கேட்கிற கேள்விகளுக்கும் ஏன் பதில் சொல்லலை என்பதை தெரிந்துகொள்வது அவசியம் இல்லையா?

 இந்த கேள்விகளுக்கு பதிலை நான் யோசித்து தெரிந்துகொள்வதற்கு எனக்கு அவகாசம் கொடு. அதற்குள், மற்றவர்கள் சொல்வதை எனக்கு கேட்டு தெரிவி! சரியா?"

 சரவணன் தலையை சொரிந்துகொண்டே நகர்ந்தான்.

 " அப்பாடா! இப்போதைக்கு தப்பித்தேன்! மரகதம் ஒருவழியாக தப்பித்தாள், நான் வேறுவழியே தப்பிச்சேன், இப்படி எல்லோரும் தப்பிக்கிறதே குறியா இருக்காங்களே தவிர, நேரடியா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.