(Reading time: 10 - 20 minutes)

சிறுகதை - பாவம்மா, அவன்! - ரவை

சீதாபதி பொறியியல் கல்லூரி ஆயிரம் மாணவர்களும் தங்கள் மன்றத் தலைவன் அழைப்பை ஏற்று, கல்லூரி மைதானத்தில் கூடிவிட்டனர்.

ஒரே ஒருவனைத் தவிர! மாதவன்!

 அவன் வகுப்பறைக்குள் ஒளிந்துகொண்டிருந்தான். அவன் அங்கிருப்பது மற்ற மாணவர்களுக்குத் தெரிந்தால், அவனையும் தரதரவென மைதானத்துக்கு இழுத்துப் போய்விடுவார்கள்.

 அவனுக்கும் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு, நாட்டின் நலனுக்காகப் போராடவேண்டும் என விருப்பம் உண்டு. ஆனால், அவன் விருப்பங்களுக்கு, அவன் வாழ்க்கையில் இடமில்லை!

 அவன் தந்தை திடுமென விபத்தில் சிக்கி, மூன்றுமாதங்கள் கையிலிருந்த பணம், தவிர கடன் வாங்கிச் செலவு செய்தும், பயனின்றி அவனையும் அவன் தாயையும் தவிக்கவிட்டுப் போய்விட்டார்.

 இப்போது, அவன் தாய்தான் அவனை கஷ்டப்பட்டு காப்பாற்றி வருகிறாள். நல்லவேளையாக, அவன் படிப்புச் செலவை, பிறந்த சாதியின் அடிப்படையில், அரசாங்கம் ஏற்றுக்கொண்டுவிட்டதால், அவனால் பொறியியல் படிப்பில் இறுதி ஆண்டு மாணவனாக உள்ளான்.

 இந்த ஆண்டு எப்படியாவது நன்கு படித்து தேர்வில் வெற்றி பெற்று, நல்ல வேலை கிடைத்து, சம்பாதிக்க ஆரம்பித்து, தன் தாயின் சுமையை தான் ஏற்கவேண்டும் என்பதே அவன் குறிக்கோள்!

 இந்த நிலையில், அவன் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி படிப்புக்கு தடை ஏற்பட்டாலோ, அல்லது போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு எதிலாவது சிக்கி, காயம் அடைந்தாலோ, அவன் கனவுகள் சிதைந்து போகும். அவன் தாய் தொடர்ந்து கஷ்டப்படுவாள். தவிர, அவன் மருத்துவச் செலவைவேறு ஏற்கும்படி ஆகிவிடும்.

 அவன் அஞ்சுவதெல்லாம், அவனுக்கு துரதிர்ஷ்டவசமாக உடலில் ஊனம் ஏற்பட்டுவிட்டால்......?

 அவன் தாய், இன்னமும் அவ்வப்போது, தந்தை விபத்தில் சிக்கி உயிர் இழந்ததை நினைத்து புலம்புகிறாள். இந்த நிலையில், மகனுக்கும் ஏதாவது உடல் உறுப்பு குறை ஏற்பட்டுவிட்டால், அவள் தாங்கமாட்டாள்.

 அதனால், அவன் சிறுபிள்ளைத்தனமாக, போராட்டத்தில் கலந்துகொள்ள முடியுமா?

 யாரோ வரும் ஓசை கேட்டு, மேசைக்கடியில் ஒளிந்து கொண்டான்.

 வகுப்பில் நுழைந்தவன் எதையோ தேடியவனாக, குனிந்து தரையைப் பார்த்தபோது, அவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.