(Reading time: 10 - 20 minutes)

நீங்கள் இருவரும் உங்கள் குடும்பத்தாருடன் பல்லாண்டு பல்லாண்டு எல்லா நலமும் பெற்று சந்தோஷமாக வாழணும்னு நானும் என் தாயும் தினமும் கடவுளை வேண்டிக்கொள்வோம். நான் கிளம்புகிறேன்.......விடை கொடுங்கள்!"

 தாயும் மகளும் முகத்தை திருப்பிக்கொண்டு குலுங்கி அழுதனர்.

 மாதவன் பதறிப்போய் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, காரணத்தை விசாரித்தான்.

 " தம்பி! உனக்கு தெரியாத விஷயத்தை தெரிவிக்கிறோம். துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து பத்து பதினைந்து மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் கிடக்கிறாங்களாம்......."

 " அப்படியா!"

 " அவர்களில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை! உன் உயிரை நாங்கள் காப்பாற்றிய அதே நேரத்தில் எங்க வீட்டுப் பிள்ளை குண்டு பட்டு சாக கிடக்கிறான், ஆண்டவன் எங்களுக்கு ஏனிந்த அநீதியை செய்திருக்கிறார்?"

 " நீங்கள் ஏன் அவனைப் பார்க்க மருத்துவ மனைக்கு ஓடாமல், இங்கே இருந்தீர்கள்? மை காட்!"

 "உன்னை இருட்டறையிலிருந்து விடுவித்துவிட்டு கிளம்ப நினைத்தபோதுதான், நீ மயங்கிக் கிடந்தாய். உன்னை அப்படியே விட்டுவிட்டுப் போக மனம் வரவில்லை, நீ மயக்கம் தெளிந்து எழுவதற்காக காத்திருந்தோம்........"

 " அப்படியா! உறுதியாக சொல்கிறேன், இவ்வளவு உயர்ந்த உள்ளம் கொண்ட உங்களுக்கு ஒரு குறையும் வராது. உங்கள் மகனை நிச்சயம் இறைவன் காப்பாற்றுவான். நீங்கள் உடனே கிளம்புங்கள்."

 "உங்கம்மாவுக்கு எப்படி நீ அவள் வாழ்வின் ஒரே பிடிப்பாக உள்ளாயோ, அப்படித்தான் எங்கள் இருவருக்கும் இந்த வீட்டுப் பிள்ளை!"

 " மை காட்! உடனே கிளம்புங்க!

 நானும் என் தாயும் மருத்துவ மனையில் உங்களை வந்து பார்க்கிறோம்! இறைவா! இவர்களை கைவிடாதே!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.