(Reading time: 10 - 20 minutes)

"இவன் நம்ம வீட்டிலே நுழையறதை பார்த்த எவனாவதோ, போலீஸோ நம்ம வீட்டுக்குள்ளே புகுந்தால், நமக்கு ஆபத்தாச்சே! அதனாலே, ஈவிரக்கம் காட்ட இது நேரமில்லே, அவனை விரட்டிடுவோம்" என்றாள்.

உடனே பதறினான் மாதவன் " அம்மா! என்னை வெளியிலே தள்ளினீங்கன்னா, என்னை போலீஸ் சுட்டுக் கொன்னுடுவாங்க. நான் எங்கம்மாவுக்கு ஒரே பிள்ளை. அப்பாவும் உயிரோடில்லே, உங்க மகனாக நினைத்து காப்பாற்றுங்கம்மா!" என கெஞ்சினான்.

 தாயைப் பார்த்து மகள் சைகையால் சத்தமிடாமல் இருக்கச் சொல்லிவிட்டு,

தனியே அவளை அழைத்துச் சென்று ரகசியமாக " பாவம்மா, அவன்!" என்று சொல்லிவிட்டு வாசல்கதவை சாத்தி பூட்டிவிட்டாள்.

 மாதவனை அழைத்துப் போய், வீட்டின் பின்பகுதியில் இருந்த இருட்டறையில் தள்ளி, கதவை வெளியே தாளிட்டுவிட்டாள்.

 இருட்டில் மாதவன் மூச்சுத் திணறினாலும், இறைவனுக்கு மனதார நன்றி செலுத்தினான்.

 அவனைப் பெற்ற தாயோ வீட்டில் தவித்துக் கொண்டிருந்தாள். மகனுக்கு என்ன ஆயிற்றோ, அவன் போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிச்சூட்டில் சூட்டில் அடிபட்டு மருத்துவ மனையில் இருக்கிறானோ என்றெல்லாம் பயந்து தவித்தாள். அவள் கிலியை, நிமிடத்துக்கு நிமிடம் தொலைக்காட்சியில் வெளிச்சமிட்டு காட்டும் காட்சிகள் அதிகரித்தன!

 பக்கத்து வீட்டுக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் முறையிட்டு அழுதாள்.

 அவர்கள் பரிதாபம் கொண்டு, உதவி செய்வதாக ஆறுதல் கூறி, அவளை வீட்டுக்கு அனுப்பினர்.

 சிறிது நேரத்தில் கலவரம் கட்டுக்குள் வந்துவிட்டதாகவும் அமைதி திரும்பிவிட்டதாகவும் செய்தி வரவே, பக்கத்து வீட்டுக்காரனை அழைத்துக்கொண்டு மாதவனின் தாய் மகனின் கல்லூரியை அடைந்து விசாரித்தாள்.

 " ஆயிரம் மாணவர்களுமாக கூட்டாகத்தான் போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷமிட்டவாறே வீதியில் இறங்கினர். மற்றதெல்லாம் உங்களைப்போல, நாங்களும் தொலைக்காட்சி செய்தியின்மூலம் அறிந்ததுதான்! பத்து பதினைந்து அடிபட்ட மாணவர்களை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்களாம். இருநூறு பேரை கைது செய்து ஊருக்கு வெளியே எங்கேயோ அழைத்துப் போனார்களாம்.

 நீங்கள் ஒண்ணு செய்யுங்கள்! முதலில் மருத்துவ மனையில் காயம் பட்டு சிகிச்சையில் இருப்பவர்களை போய் பாருங்கள், உங்கள் மகன் அங்கு இல்லையென்றால் நிம்மதியாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.