(Reading time: 10 - 20 minutes)

வீட்டில் காத்திருங்கள். மாதவன் கட்டாயம் சீக்கிரமே நல்லபடியாக வீடு வந்து சேர்ந்துவிடுவான். மாதவன் நல்ல பையன். வம்பு, தும்புக்கு போகமாட்டான். பொறுப்பா படிக்கிறான்.........."

 உடனே மாதவனின் தாய் மருத்துவ மனைக்கு ஓடினாள். போகும்போது, இறைவனை பிரார்த்தித்துக்கொண்டே ஓடினாள்!

 இறைவன் அவளை கைவிடவில்லை!

 அடிபட்ட மாணவர்களின் பட்டியலில், மாதவன் இல்லை!

 ஓரளவு நிம்மதியாக வீடு திரும்பி, வாசலில் அமர்ந்து வழிமேல் விழிவைத்து காத்திருந்தாள்.

 எந்த திசையிலிருந்து வருவான் என்பதுகூட தெரியாமல் இருபுறமும் பார்த்துப் பார்த்து கழுத்து வலித்தது, தலை சுற்றியது!

 மயங்கி விழுந்துவிடுவோமோ எனும் பயத்தில், வீட்டுக்குள் சென்று படுத்தாள்.

 பிறகுதான் ஞாபகம் வந்தது, தான் காலையிலே இருந்து ஏதும் உணவு கொள்ளவில்லை என்பது. பசி மயக்கத்தில்தான் தலைசுற்றல் என புரிந்துகொண்டு, சிறிது சாப்பிட்டுவிட்டு மீண்டும் வாசலுக்கு வந்து வழி பார்த்திருந்தாள்.

 " இருட்டறையில் ஜன்னலுமில்லையே, அவனை அங்கு தள்ளி இரண்டு மணி நேரமாகிவிட்டதே" என திடீரென பயம் வந்து, அந்த வீட்டில் வசித்த தாயும் மகளும் இருட்டறையை திறந்துவிட முனைந்தனர்.

 அந்தச் சமயம் பார்த்து, தாயை யாரோ செல் போனில் அழைக்கவே, அவள் எடுத்துக் கேட்டதும், பதறிப்போய் போனை மகளிடம் தந்தாள். மகள் அமைதியாக கேட்டுவிட்டு போனை வைத்துவிட்டாள்.

 தாயை அழைத்துக்கொண்டு மாதவனை வைத்துக் பூட்டியிருந்த இருட்டறையை திறந்து பார்த்தனர்!

 அவர்கள் பயந்தது, சரிதான்! மாதவன் மயங்கிக் கிடந்தான். தாயும் மகளும் ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்து அவன் முகத்தில் தெளித்து, மெதுவாக அவனை தோளில் சாய்த்துக்கொண்டு வெளியே அழைத்து வந்தனர்.

 சூடாக காபி கொடுத்தனர். மாதவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு வந்தது.

 இருவர் காலிலும் விழுந்து வணங்கி எழுந்தான்.

 " நான் இனி வாழப்போகிற நாட்கள், நீங்கள் இருவரும் எனக்குப் போட்ட பிச்சை! நீங்கள் என்னை காப்பாற்றி இருக்காவிட்டால், என் உயிருக்கு என்ன நேர்ந்திருக்குமென சொல்ல முடியாது. என்னைப் பெற்றவள் வீட்டில் என்னை காணாமல் தவித்துக் கொண்டிருப்பாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.