(Reading time: 10 - 20 minutes)

பகுதியில் கலந்து அங்கிருந்தும் வெளியேறி வீடு செல்கிற சமயத்தை எதிர்நோக்கியிருந்தான்.

 அப்போது, எதிர்திசையில், ஒரு போலீஸ் வேன் வந்தது.

 அதைப் பார்த்ததும், மாணவர்கள் ஆவேசமடைந்து வேனின்மீது கல் எறியப்பட்ட தொடங்கினர்.

 வேனிலிருந்து இறங்கிய காவலர்கள், ஒலிபெருக்கியில் மாணவர்களை கலைந்துவிடச் சொல்லி எச்சரித்தனர்.

 மாணவர் தலைவன் தனது மைக்கில் பதில் கூறினான்.

 " நாங்கள் அமைதியாகத்தான் போராடுகிறோம். போராடும் உரிமை ஜனநாயகத்தில் எங்களுக்கு உண்டு. எங்களை தடுக்காதீர்கள்."

 காவலர்கள் அதற்கு பதில் சொல்லாமல், முதலில் கண்ணீர் புகை பிரயோகப்படுத்தினர். அதற்கு கூட்டம் பயப்படாமல் நின்றுகொண்டிருந்ததால், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

 மாணவர் கூட்டத்தில் சிலர் பயந்துபோய் பின்வாங்கினர். அதில் மாதவனும் ஒருவன்!

 மாணவர் தலைவன் மீண்டும் மைக் எடுத்துப் பேசினான்.

 " நாங்கள் உங்கள் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். உயிரே போனாலும், கலைந்து செல்லமாட்டோம். சரிதானே, தோழர்களே!"

 என மாணவர்பக்கம் குரல் கொடுத்ததுமே, 'ஆமாம்' என வெறி பிடித்து குரல் எழுப்பியவாறு, முன்னேறி காவலர்களையும் வேனையும் தடியாலும் கல்லாலும் தாக்கினர்.

 அதில் ஒரு கல், காவலர் தலைவனின் நெற்றியில் பட்டு, ரத்தம் கொட்டியது.

 அடுத்தகணமே 'ஷூட்' என்ற ஆர்டர் ஒலி ஓயுமுன்னே, முதல் வரிசை மாணவர்களில் சிலர் கீழே விழுந்தனர்.

 கூட்டத்தில் குழப்பம். சிலர் முன்னேற, பலர் பின்வாங்க, மாணவிகள் கூட்ட நெரிசலில் மிதிபட்டு கதறினர்.

 இதுதான் சமயமென மாதவன் அருகிலிருந்த வீட்டுக்குள் ஓடி ஒளிந்தான்.

 அவனுடைய துரதிர்ஷ்டம், அந்த வீட்டில் ஆண்களே அப்போது இல்லை. இரண்டே பெண்கள்! தாயும் மகளும் போலத்தான் தெரிந்தது!

 அவர்கள்முன் விழுந்து கைகூப்பி, 'என்னை காப்பாத்துங்க' என கதறினான், மாதவன்!

 வீட்டுக்கு வெளியே நடக்கிற கலவரத்தில் பயந்துபோயிருந்த அந்தப் பெண்கள் என்ன செய்வதென தெரியாமல் விழித்தனர்.

தாய் மகளிடம்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.