(Reading time: 10 - 20 minutes)

மாதவனைப் பார்த்துவிட்டான்.

 " டேய் மாதவா! இங்கே என்னடா பண்றே? ச்சீ! பெட்டைக் கோழிகள்போல, இப்படி ஒளியறே? எழுந்து வாடா, என்னோட! வரலேன்னா, மற்ற மாணவர்களையும் அழைத்து வந்து உன்னை குண்டுக்கட்டா தூக்கிண்டு போயிடுவோம்........."

 மாதவன், வெளியே வந்து, மிரட்டியவனின் காலில் விழுந்து கெஞ்சினான்.

 " ப்ளீஸ்! என்னை விட்டுவிடுடா! என் நிலமை அப்படிடா! ப்ளீஸ்டா!"

 " நான் சொன்னால், நீ கேட்கமாட்டே! இப்ப பார்!"

 விசில் அடித்து, சகாக்களை அழைத்ததும், பத்து பதினைந்து மாணவர்கள் ஓடிவந்து, மாதவனை அலக்காகத் தூக்கிக் கொண்டு போய், கூடியிருந்தவர்களின் முதல் வரிசையில் நிறுத்திவிட்டார்கள்.

 புழுவைப் போல நெளிந்தவாறு, மாதவன், நின்று தவித்தான்.

 மனதிற்குள், பிரார்த்தனை செய்துகொண்டான்.

 " இறைவா! நீதான் என்னை காப்பாற்றியாக வேண்டும்.இனி நான் தப்பிக்க வழியே இல்லை........."

 தலைவன் மேடையேறி ஒலிபெருக்கியில் பேசினான்.

 " சக மாணவ- மாணவிகளே! நாம் இங்கே கூடியிருப்பது, நாம் விரும்பி அல்ல; நாம் கட்டாயப்படுத்தப்பட்டு

உள்ளோம். வேறு வழியில்லை.

 இன்றைய அரசாங்க ஆணையின்படி, நமக்குள்ளே மத அடிப்படையில் பிரிவுபடுத்தப் பார்க்கிறார்கள். நாம் அனைவரும் இந்தியர்கள். இந்த நிலையிலிருந்து எந்த மாற்றம் நம்மீது திணிக்கப்பட்டாலும், அதை நாம் எதிர்த்துப் போராடுவதே நம் முதல் கடமை, படிப்பு இரண்டாவதுதான்!

 நமக்கு துணையாக, எதிர் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக எழுச்சி கொண்டு நாடு முழுவதும் போராடி வருகிறார்கள். போலீஸ் அத்துமீறலில், சில உயிர்கள் பலியாகியுள்ளன.

 வேறு வழியில்லை, புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு வீதிக்கு வந்து நம் எதிர்ப்பை அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்ல, சிறைகளை நிரப்புவோம்.

 போக்குவரத்தை நிறுத்துவோம். காவல்துறை அடக்குமுறையை தூள் தூளாக்குவோம்!........."

 ஆவேசமான இந்தப்படத்த பேச்சைக் கேட்டு, கூட்டமே கைகளில் கிடைத்த ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, வீதிக்குள் புகுந்தனர்.

 மாதவன் மெதுவாக முன்னணியிலிருந்து பின்வாங்கி, கூட்டத்தில் மாணவிகள் இருந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.