(Reading time: 9 - 17 minutes)

விடையை தேடி கண்டுபிடிக்கவில்லை, இது ஒரு சாபக்கேடு!"

 சரவணன் அடுத்து யாரை கேட்கலாம் என்று யோசிக்கையில், கையில் கிரிக்கெட் மட்டை எடுத்துக்கொண்டு, அண்ணன் சீனு வெளியே கிளம்புவதை கவனித்து, ஓடிப்போய், அவனிடம் தன் கேள்வியை கேட்டான்.

 " சரவணா! நல்ல கேள்வி! இதுக்கு பதில், நான் மேட்ச் ஆடிட்டு வந்து நிதானமா சொல்றேன், சரியா?" என்று விசில் அடித்துக்கொண்டு வெளியேறினான்.

 " அக்கா! அக்கா! இங்கே வாயேன்!" என அக்கா யமுனாவுக்கு குரல் கொடுத்தான்.

 " நான் பிசியா இருக்கேன், என் ரூமுக்கு வா!"

 சரவணன் அவள் அறைக்கு சென்றான். யமுனா தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளிடம் தனது சந்தேகத்தை சரவணன் தெரிவித்தான்.

 அவள் டக்கென யோசிக்காமலே பதில் சொன்னாள்.

 " சரவணா! இது தொழில் ரகசியம்! பொருட்களை தயாரிக்கிறவர்கள், தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்கள் மறுபடியும் மறுபடியும் வாங்குவதற்காக, அப்படி ஒரு தேதியை போடுகிறார்கள். இல்லேன்னா, ஒரு முறை வாங்கின பொருளையே நாம நம்ம ஆயுள் முழுவதும் வைத்துக்கொண்டிருப்போம், பொருளை திரும்பத்திரும்ப வாங்கமாட்டோம். தயாரிப்பாளருக்கு பணம் வராது. ஆனால், கடவுளுக்கு அந்தமாதிரி அவசியமெல்லாம் கிடையாது. அதனாலே அவர் படைப்புக்கு காலாவதி தேதி போடறதில்லே, சரிசரி, நான் பிசியா இருக்கேன்லே, தொந்தரவு செய்யாதே! ஆமாம், பாட புத்தகங்களை படித்து நிறைய மார்க் வாங்கற வழியை பார்க்காம, நீ இப்படி உன் டயத்தை வேஸ்ட் பண்றே, போ! போய் படி!"

 விட்டால் போதும் என சரவணன் நகர்ந்தான்.

 அடுத்து, சமயம் பார்த்து, தனது சந்தேகத்தை அப்பாவிடம் தெரிவித்தான்.

 அவர் தன் கடைக் குட்டியின் புத்திசாலித்தனத்தை, தன் மனைவியுடன் சேர்ந்து, ஆனந்திக்க, அவளை அழைத்தார்.

 " எல்லாம், உங்கப்பாவுக்கு ஒருவேளை மருந்து கொடுடான்னு சரவணனை சொன்னதுக்கு பலன்! இனிமேல் நானே அதை செய்கிறேன்........"

 " மரகதம்! ஏன் அலுத்துக்கறே! குழந்தை வித்தியாசமா ஒரு சந்தேகத்தை கேட்கறானேன்னு சந்தோஷப்படாம! உட்காரு! அவன் சொல்றதைக் கேளு!"

 " என்னிடம் அப்பவே அவன் கேட்டாச்சுங்க! கடைசியா நான் பதில் சொல்றேன்னு தப்பிச்சேன், இப்ப திரும்பவும் சிக்கிக்கிட்டேன்......சரி, நீங்க அவனுக்கு பதில் சொல்லுங்க!"

 " சரவணா! உன் கேள்விக்குப் பதிலா, கடவுள் உடனே, எல்லாருக்கும் அவங்க எக்ஸ்பையரி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.