செய்யப்போறே?"
" அண்ணா! நான் சர்ஜரிக்கு சம்மதித்தாலும், லட்ச ரூபாய் கட்டினால்தானே அதை செய்வாரு, டாக்டர், பணத்துக்கு நான் எங்கே போவேன், என்ன செய்வேன்? என் தலையெழுத்தை, அந்த ஒருத்தன், ஒழுங்கா எழுதாமல், கிறுக்கிட்டான்! என்னாலே, என் கணவரையும் காப்பாற்ற முடியாது, என்னையும் காப்பாற்றிக்க முடியாது, நானும் அவர்கூடவே போயிடறேன்........"
தாரிணி சொன்னதுதான் யதார்த்தமான நிலை என்பதை பார்வதியும் ராமனும் உணர்ந்தனர்.
ஏதாவது செய்து ஒரு உயிரை, இல்லை, இரண்டு உயிரை காப்பாற்றியாக வேண்டுமே!
" பார்வதி! தாரிணிக்கு துணையா நீ இங்கேயே இரு! நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்......." எனக் கூறிவிட்டு ராமன் வெளியே சென்றார்.
அந்த க்ளினிக் கட்டிடத்துக்கு உள்ளேயே, இருந்த ஒரு சிறிய பிள்ளையார் கோவிலுக்கு சென்ற ராமன் "பிள்ளையாரப்பா! எங்களைப்போல ஏழைங்களுக்கு ஏன் இந்த பணக்கார நோயை கொடுக்கிறே? எங்க தவிப்பை வேடிக்கை பார்க்கிறே? இதெல்லாம் உன் விளையாட்டுங்கிறதுனாலே, இதிலிருந்து எங்களை காப்பாற்றுகிற வழியையும் நீதான் காட்டணும்......."
'டாக்டர் காலிலே விழறதுதான் ஒரே வழி'ன்னு யாரோ ஒருத்தர் தன்னுடன் இருந்தவரிடம் பேசிக்கொண்டே போகிறார்!
ராமனுக்கு இது அசரீரி வாக்காக தோன்றியது!
ஓடினார், டாக்டர் பாப்பையாவிடம்!
டாக்டரின் அறைக்குள், ராமன் நுழைந்தபோது, அவர் அங்கிருந்த ஏசுநாதரின் படத்தின் முன்பு, மண்டியிட்டு கண்களை மூடி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்!
சிறிது நேரத்தில், டாக்டர் கண்விழித்து ராமனை பாரத்தவுடன், முகத்தில் மலர்ச்சியுடன், "உங்க நண்பர் சபாபதிக்கு கடவுள் அருள் நிறைய இருக்கு! ஏசுநாதர் எனக்கு உத்தரவு கொடுத்துட்டார், சர்ஜரி செய்ய!
உட்காருங்க! சபாபதிக்கு ரத்தக் குழாயிலே உள்ள ஐந்தாறு ப்ளாக்குகளும் முழுமையா ரத்த ஓட்டத்தை ஹார்ட்டுக்கு போகாமல், தடுத்துவிட்டன. அவர் இப்ப உயிரோடிருக்கிறதே பெரிய அதிசயம்!
இந்த நிலமையிலே, பைபாஸ் சர்ஜரி செய்ய தேவையான குறைந்தபட்சம் நாலைந்து மணி நேரம் அவர் உடம்பு அனஸ்தீஷியா மயக்க மருந்தை தாங்குமா? தாங்கலேன்னா ஆபரேஷன் டேபிளிலே, உயிர் போயிடும்!
அதனாலே, அவருக்கு சர்ஜரி செய்யலாமா, கூடாதான்னு ஏசுநாதரை கேட்டேன். ஏசுநாதர்