(Reading time: 8 - 15 minutes)

 "சார்! உங்க பெயரை சுருக்கி, ஹெட் மாஸ்டர் 'ரங்கு'ன்னு கூப்பிடறாரில்லே"

 " ஆமாம்!"

 " உங்க பெயருக்கு முன்னாடி 'கே'ன்னு இனிஷியல் வருதே, அது உங்க அப்பா பெயரா?"

 "இல்லடா! என் சொந்த ஊர் கும்பகோணத்தை குறிக்கிறது"

 " நீங்க ஒரு தமிழாசிரியர்! உங்க பெயரை தமிழிலே சுருக்கமா 'கு.ரங்கு'ன்னு சொல்லலாமில்லையா...."

 வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் எங்கள் கேலியை புரிந்துகொண்டு, உரக்க 'குரங்கு'ன்னு கத்த, தமிழ் ஆசிரியர் எங்களை பிரம்பால் அடிக்கவர, நாங்க ரெண்டு பேரும் பிடிச்சோம் ஓட்டம்.............அந்த வருஷம் தமிழ் பரீட்சையிலே ஃபெயில் மார்க், ரெண்டு பேரும்"

 அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவை திறந்தோம்.

 அம்மா! கையில் காபியுடன்!

 " குழந்தை, பழசெல்லாம் நினைவு வச்சிண்டு, நான் அந்த காலத்திலே கொடுத்த காபியை இன்னும் மறக்காம இருக்கான், பார்!"

 அவன் ஆசையுடன் அம்மாவிடமிருந்து காபியை வாங்கிக் கொண்டு, "அம்மா! உட்காருங்க! நானும் இவனும் மேட்ச் விளையாடிவிட்டு, களைச்சுப்போய், பசியோட வந்து நிப்போம்.....நீங்க எங்களுக்கு சுடச்சுட சாப்பாடு போடுவீங்க....வயிறு ஃபுல்லா சாப்பிட்டபின், ரெண்டு பேரும் படுத்து உருளுவோம்......அம்மா! அந்த காலத்திலே நான் என் வீட்டிலே இருந்த நேரத்தைவிட, இந்த வீட்டிலே இருந்த, சாப்பிட்ட, பழகின நேரம்தான் அதிகம்! அதையெல்லாம் எப்படிம்மா மறக்கமுடியும்?"

 அம்மா, அவனை அந்தக் காலத்திலிருந்து 'குழந்தை'ன்னுதான் சொல்வாங்க! அவன் எங்க குடும்பத்தில் ஒருவனாக ஒட்டி உறவாடியவன்!

 அவன் எங்களுடன் அறையிலிருந்து வெளிவந்தவுடன், எங்கப்பாவை கட்டி முத்தமிட்டான்.

 " அப்பா! நான் இன்னிக்கி இருக்கிற இந்த நிலைக்கு வரணும்னு ஆசைப்பட்டது, அதற்காக உங்க மகனின் எதிர்காலத்தையே தியாகம் செய்தது, என்னை எப்படியாவது எங்க குடும்பத்தினர் செய்கிற இழிச்சொற்களிலிருந்து காப்பாற்றவும், அன்று நீங்க வலியவந்து, எனக்கு உதவி செய்யலேன்னா, 'உதவாக்கரை', 'உருப்படாதவன்'னு இகழப்பட்டவன் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா?..............."

 " போதும்டா! சின்ன விஷயத்தை பெரிசு பண்ணாதே!"

 " எது சின்ன விஷயம்? அன்னிக்கு, நேஷனல் லெவல் டீமுக்கு பராசுராவை மெரிட்படி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.