(Reading time: 6 - 12 minutes)

சிறுகதை - கொடுத்தால் கிடைக்கும் - ஜெப மலர்

தாத்தா தாத்தா என கத்திக் கொண்டே ஓடி வந்தாள் 7ம் வகுப்பு படிக்கும் கீதா..

தான் அழைத்தும் பதில் வராததால் தாத்தா எங்க இருக்கீங்க என்றபடியே உள்ளே வந்தாள் கீதா. 

தலையை துவட்டிக் கொண்டு வந்தவர் கீதாவை பார்த்ததும்... கீதாமா நீ ஸ்கூலுக்கு போகலையா என்றார்.

இல்லை தாத்தா.. ஊருல விழா நடக்கிறது அதனால் 2நாள் லீவு விட்டிருக்காங்க.

அப்படியாமா அப்போ உனக்கு ஜாலி தான். 

ஆமா தாத்தா.. நீங்க எங்க கிளம்பிட்டீங்க

நான் சிவா காலேஜுக்கு போறேன் கீதா.

ஓ.. அம்மா சொன்னாங்க.. அண்ணன் காலேஜுக்கு ஒழுங்கா போகாததால அவனை இனி காலேஜுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம்.. அப்படியா தாத்தா

ஆமாமா... புட்பால் புட்பால்னு சுற்றிட்டு பெயில் ஆயிட்டான் அதான்.. நீயும் என்கூட காலேஜுக்கு வரியா

ஐயையோ நான் வரலப்பா... 

ஏனம்மா... 

தாத்தா.. இந்த காலத்தில் எல்லா பசங்களும் ரொம்ப மோசமானவங்களாம். அதனால் பசங்க இருக்கிற பக்கமே போக கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க. 

அம்மா சொன்னது சரி தான் ஆனால் முழுவதும் இல்லை. 

என்ன தாத்தா சொல்றிங்க... 

எல்லாம் பசங்களும் மோசமானவங்க இல்லை. நல்லவங்களும் இருக்காங்க. அதுமாதிரி பொம்பளைங்கள்ல மோசமானவங்களும் இருக்காங்க.. அதனால கவனமா நடந்து கொள்ளனும். 

அச்சச்சோ அப்படியா.. எனக்கு பயமா இருக்கு தாத்தா. 

பயப்படாதமா... நாம நல்லது செய்தால் நமக்கும் நல்லது நடக்கும் கீதா. 

ஆனால்,  நிறைய பேர் படிக்க நீங்க காரணமாக இருந்திரிக்கிங்க, நல்ல ஆசிரியரா இருந்து நிறைய பேர் நல்ல நிலையில் இருக்க காரணமா இருந்திருக்கிங்க, ஆனால் சிவா அண்ணனுக்கு நல்லது நடக்கல. 

நடக்கும்... ஆண்டவன் வழி விடுவான். அவனுக்கு மேத்ஸ் படிக்கணும்னு இருக்கு, அதோட புட்பால் விளையாடனும்னு இருக்கு. பார்க்கலாம் என்ன நடக்குனு. 

தாத்தா நானும் உங்க கூட வர அம்மா கிட்ட கேட்டுட்டு வரேன். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.