(Reading time: 6 - 12 minutes)

அவர்களையே பார்த்து கொண்டிருந்த தாத்தா... தம்பி க்ளாஸுக்கு போகலையா.. 

இல்லை தாத்தா... போனாலும் உள்ள விட மாட்டார். 

ஓ... நீங்க தான் அப்பவே வந்திட்டிங்களே, போய்ருக்கலாம்ல. 

அப்போ இவ்ளோ நேரமா எங்களை தான் பார்த்து கொண்டு இருந்திருக்கீங்க. ம்ம்ம்.. 

இப்போ போனது எங்க ப்ரண்ட். பேர் தேவி.. அவ காலையில் 5.45க்கு வீட்டில் இருந்து கிளம்பிடுவா.. அப்போ தான் 7.30க்கு இங்க வர முடியும்.அந்த பஸ் வரலையென்றால் இன்னைக்கு வந்த மாதிரி 8.45க்கு தான் வருவா. அவ சாப்பிட்டு வர மாட்டாள். சில நாள் இங்க வாங்கி தான் சாப்பிடுவா. பக்கத்து காலேஜ் பசங்க கிண்டல் பண்றாங்கன்னு பாதி நாள் சாப்பிடமாட்டாள். 1.30க்கு அப்புறம் தான் க்ளாஸ் முடியும். அது வரை பசியோடு இருப்பாள். அதனால் நாங்க தினமும் அவக்கூட இருப்போம். அவள் நிம்மதியா வகுப்பு போவாள். கூட படிக்கிறவங்களுக்கு இந்த உதவி கூட செய்யலனா எப்படி என்று சொல்லி விட்டு நோட்டை தூக்கி கொண்டு காலேஜுக்கு சென்றார்கள். 

தாத்தா நீங்க சொன்னது சரி தான்.. நல்லவங்களும் இருக்காங்க என்று சொல்லி விட்டு இருவரும் பிரின்சிபால் அறையை நோக்கி நடந்தார்கள். 

வணக்கம் அம்மா...... தாத்தா 

வணக்கம் சார், உட்காருங்க..... பிரின்சிபால் 

அம்மா நான் சிவாவோட தாத்தா. அவனுக்கு புட்பால் மேல ரொம்ப ஆர்வம். முதல் வருடம் என்பதால் அஜாக்கிரதையாக இருந்து விட்டான். அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் அம்மா....... தாத்தா 

சார்... அவனை ஒன்னு ஆர்ட்ஸ் குருப்க்கு மாற சொல்லுங்க, அப்போ அவனால் புட்பால்லயும் கான்சன்ரேட் பண்ண முடியும். இல்லையென்றால் புட்பால்ல விட்டு விட்டு மேத்ஸ் படிக்க சொல்லுங்க... 

அம்மா.. அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். அவன் இரண்டிலும் சைன் பண்ணுவான். நான் கரண்டி தாரேன். அடுத்த எக்ஸம் மார்க்கும் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் நீங்க சொல்ற மாதிரி அவனை மாற்றிடலாம்.

சரி சார்... உங்களுக்காக ஒத்துக் கொள்கிறேன். 

ரொம்ப நன்றி அம்மா... 

நன்றி நான் தான் உங்களுக்கு சொல்லனும். என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கா என்று தெரியல. நான் ஆறு படிக்கும் போது படிக்க லாயக்கு இல்லை என்று டீச்சர் வெளியே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.