(Reading time: 6 - 12 minutes)

சரி கீதா என்றவாரே கதவை பூட்ட கீதாவும் அம்மாவிடம் அனுமதி வாங்கி கொண்டு தாத்தாவுடன் கிளம்பினாள். 

இருவரும் காலேஜ் நிறுத்தத்தில் இறங்கி காலேஜை நோக்கி நடக்கும் வழியில் ஒரு டிபன் சென்டரை பார்த்து உள்ளே சென்றார்கள். 

அங்கே பசங்கள் சுற்றி உட்கார்ந்து பேசி சிரித்து அந்த இடத்தையே கலகலப்பாக மாற்றி இருந்தார்கள். 

தாத்தா பாத்திங்களா, வகுப்புக்கு போகாம இங்க உட்கார்ந்து டைம்ம வேஸ்ட் பண்றாங்க. 

ம்ம்ம் என்றவாறே இருவரும் அவர்களை கவனிக்க தொடங்கினார்கள். 

டேய் மச்சான்.. தேவியும் விஜியும் இன்னும் வரல.. வருவாங்களா இல்லையா 

இரு மாப்பிள்ளை செவன் ஏ பஸ் வர்ற வரை பார்ப்போம்.. 

டேய் மச்சான் முதல் பீரியட் பிஸிக்ஸ்ல நாம லேட்டா போனா மனுஷன் உள்ளயே விட மாட்டாரு.. ஆப்சென்ட் போட்டுடுவாரு. 

அட ஆமா... டேய் சூர்யா நீ க்ளாஸுக்கு போ. நீ ஏற்கனவே லீவ் நிறைய போட்டுட்ட. 

மச்சான் சூர்யா துணைக்கு நானும் போறேன், நீங்க பார்த்து வாங்கடா என்று சொல்லி விட்டு கார்த்திக்கும் அவனுடன் கிளம்பி விட்டான். 

தாத்தா பாத்திங்களா... க்ளாஸுக்கு போகாம இங்க பொண்ணுங்களுக்காக காத்திருக்காங்க என்று சொல்லும் போதே பஸ்ஸில் இருந்து ஒரு பெண் இறங்கி இவர்களை நோக்கி வந்தாள். 

ஹாய் தேவி... விஜி வரலயா

ஆமா சக்தி.. அவ வரலை.. வழக்கமாக வர்ற பஸ் வரல அதான் லேட். 

பரவால தேவி... சீக்கிரம் சாப்பிடு இன்றைக்கு பிஸிக்ஸ் லேப். 

அச்சச்சோ.. மறந்தே போய்ட்டேன். நீங்க போய்ருக்கலாம்ல. சார் லேட்டானா ஆப்சென்ட் போட்டிடுவாரே. 

அதுக்காக உன்னை தனியாக விட்டு விட்டு எப்படி போறது. பக்கத்து காலேஜ் பசங்க வேற ஒரு மாதிரி நடந்து கொள்றானுங்க... கிளாஸ்ல உட்கார்ந்தாலும் நீ எப்போ வருவனு பார்த்துக்கிட்டு இருக்கனும். அதுக்கு உன்னையும் கூட்டிட்டே க்ளாஸுக்கு போய்டலாம்னு தான். 

சரி சரி நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன். கிளம்பலாமா என்றவளிடம், 

தேவி நீ போ நாங்க வர்றோம் என்று அவளை அனுப்பி விட்டு அவள் கேம்பஸ்க்குள் நுழையும் வரை காத்திருந்து மீண்டும் கதையடிக்க ஆரம்பித்தார்கள். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.