(Reading time: 9 - 17 minutes)

 அந்தப் பாதையில், ஒரு டிராபிக் சிக்னலில் சில வினாடிகள் காத்திருந்தபோது, எதேச்சையாக பக்கவாட்டில் பார்வையை செலுத்தினார்.

 அங்கே கண்ட காட்சியில் அப்படியே உறைந்து போனார்.

 ஆம், அவருடைய செல்வ மகள், அவருடைய சகலவிதமான சொத்துக்களின் வாரிசு, குமாரி மல்லிகா ஒரு இளைஞன் ஓட்டிய ஸ்கூட்டரில் அவன் பின்னால் நெருங்கி அமர்ந்து, அவன் தோளில் சாய்ந்தவாறு ஏதோ பேசி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

 சுதாரித்துக்கொண்டு, அந்த இளைஞனை உற்று நோக்கினார்.

 அட! நம்ம வையாபுரியின் மகன் சண்முகம்!

 அந்தக் காட்சியை அண்ணாமலை தனது செல்போனில் பதிவு செய்துகொண்டார்.

 சண்முகமும் மல்லிகாவும் ஒரே பள்ளி, கல்லூரியிலே படித்தவர்கள். இரு குடும்பங்களும் நெருங்கிப் பழகுகிறவை!

 வையாபுரி அவருடைய கம்பெனியில் மேனேஜராக வேலை பார்க்கிறார்.

 நல்ல குடும்பம்! என்றாலும், அந்தஸ்து காரணமாக, அண்ணாமலை அந்தக் குடும்பத்தை சற்று தள்ளியே வைத்திருந்தார்.

 கதிரவன் சொன்னது சரிதான்! மல்லிகா, சண்முகத்தை கதிரவனிடம் அனுப்பி தங்கள் காதலை தெரிவித்திருக்க வாய்ப்புகள் உண்டு.

 சிக்னல் பச்சை நிறத்துக்கு மாறியதால், அண்ணாமலை காரை மெதுவாக, சண்முகம்-மல்லிகா பயணித்த ஸ்கூட்டரின் பின்னே சென்று அவர்கள் எங்கு செல்கிறார்கள் என நோட்டம் விட்டார்.

 அவர்கள் நடேசன் பூங்கா வாயிலில் நிறுத்தி இறங்கினர்.

 அண்ணாமலைக்கு அங்கே மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

 அங்கே சிரித்த முகத்துடன் ஒரு காதல் ஜோடி வரவேற்றது!

 உற்று நோக்கினார். அந்த இளைஞன், கதிரவன்! அவனுடன் கைகோர்த்து நின்றவள், சண்முகத்தின் தங்கை பூர்ணிமா!

 அண்ணாமலை அந்தக் காட்சியை தனது செல் போனில் பதிவு செய்துகொண்டார்.

 இரண்டு காதல் ஜோடிகளும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்ததால், அண்ணாமலையை கவனிக்கவேயில்லை.

 அண்ணாமலை வேகமாக காரை ஓட்டிக்கொண்டு தங்கையின் வீட்டுக்கு விரைந்தார்.

 தங்கையின் வீட்டுக்குள் நுழைந்தபோது, உள்ளே தம்பதிகளுக்கிடையே காரசாரமான விவாதம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.