(Reading time: 9 - 17 minutes)

சிறுகதை - பரம ரகசியம்! - ரவை

"ப்பா! ராத்திரி கனவிலே ஒருத்தர் வந்து என்னை எழுப்பி, ஒரு கேள்வி கேட்டார்."

"அப்படியா? சொல்லு, சொல்லு! என்ன கேள்வி?"

 "கேள்விக்கு முன்னே, என்ன சொன்னார்னு சொல்றேன்.

 'தம்பி! உயிரினங்கள், மனிதன், மிருகங்கள், பட்சிகள், பூச்சிகள் எல்லாமே காற்றை சுவாசித்து, அதிலுள்ள கரியமிலவாயுவை வெளியேற்றிவிட்டு, பிராணவாயுவை உட்கொள்கிறோம். ஆனால், தாவரங்கள், செடி, கொடி, மரங்கள் எல்லாம் நேர் எதிராக, கரியமிலவாயுவை ஏற்றுக்கொண்டு பிராணவாயுவை வெளியேற்றுகின்றன, இல்லையா?

 அதனால்தான், மரத்தடியிலே நிற்பது நல்லது, என்கிறார்கள், இல்லையா?

 இதெல்லாம் விஞானிகள் சொல்லி நமக்கு வளர்ந்தபிறகுதான் தெரிகிறது. இன்றும்கூட, நம் அறிவுக்கு, காற்றிலிருந்து பிராணவாயுவை எப்படி பிரிப்பது என்பது தெரியாது, இல்லையா?

 நமக்கே இந்த நிலைன்னா, அறியும் சக்தியே இல்லாத தாவரங்களுக்கு கேட்கவே வேண்டாம், இல்லையா?

 இப்படி நம் அறிவுக்கு, மூளைக்கு எட்டாத அந்த பிரிக்கிற நுட்பம், தாவரங்களுக்கும் நம்ம நாசிக்கும் மட்டும் எப்படி தெரிகிறது?

 விஞானிகள் உட்பட, எவருக்குமே, குழந்தைப் பருவத்திலேயே, அறிவு வளராதபோதே, உடம்பின் உறுப்பான நாசிக்கு மட்டும் எப்படி தெரிந்தது?

 தாவரங்களுக்கு அந்த நாசிகூட இல்லையே, அவைகள் எப்படி பிரிக்கின்றன?

 தம்பீ! எனக்கென்ன தோணுதுன்னா, நாம் ஜடம்னு நினைக்கிற உறுப்புகளுக்கு அறிவு இருக்கிறதுன்னு! சரியா? இல்லையா?

 அதாவது தம்பீ! நாம் வேறு, நம் உடல் உறுப்புகள் வேறு, நம் அறிவு வேறு, அவைகளின் அறிவு வேறுன்னு தோணுது இல்லையா?

 தம்பீ! இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறே?'

 இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் விழித்தபோது, வந்தவர் சொன்னார்:

 ' தம்பீ! அவசரமில்லே, பதிலை யோசித்துவை; நாளைக்கு வந்து தெரிஞ்சிக்கிறேன்'

 என்று சொல்லிவிட்டுப்

போய்விட்டார்."

 கதிரவனின் அப்பா வாய்விட்டு சிரித்துவிட்டு, அவனிடம் ரகசியமாகச் சொன்னார்.

 " கதிரவா! அதைவிட அவசரமா வேற ஒரு கேள்விக்கு நீ பதில் சொன்னால்தான், நம்ம ரெண்டு பேருக்குமே இன்னிக்கி வீட்டிலே சாப்பாடுன்னு அம்மா கறாரா சொல்லிட்டாள்........"

 " உன்னைக் கேட்ட கேள்விக்கு நீதானே பதில் சொல்லணும், எனக்கேன் தண்டனை?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.