(Reading time: 9 - 17 minutes)

பண்ணுங்க! பரவாயில்லே, வாதி ஒரு பெண் என்பதால், நான் மனமிரங்கி வந்து மேலே தொடர்கிறேன்.

 மாமா வாழ்கிற வரையில், அவர் தயவிலே நாம் வாழ்கிறமாதிரியே ஒரு தோற்றம் சமூகத்திலே உண்டாகும்.

 அவருக்குப் பிறகு, அவருடைய சொத்துக்கள் அனைத்துக்கும் அவர் மகள் வாரிசாவதால், அவருக்கிருந்த கௌரவம், மதிப்பு, மரியாதையெல்லாம் அவளுக்கு இயற்கையாகவே போய்ச்சேரும், அதாவது நாம் தொடர்ந்து, நமது கௌரவத்தை இழந்து நிற்போம். சரியா, தவறா?"

 " இப்ப என்னதான்டா சொல்றே?"

 " அம்மா! உங்கண்ணன் மகளை நான் கட்டிக்கணும்னா, ஒண்ணு, நாம் அவர் அளவுக்கு பணக்காரங்களாகணும், இல்லேன்னா, மாமா சுயமா சம்பாதித்துள்ளதால் அவருக்குள்ள உரிமையை பயன்படுத்தி, தன் சொத்துக்களில் பெரும்பகுதியை தங்கைக்கு சீதனமா அப்பா பெயருக்கு மாற்றணும் மாமா! இந்த இரண்டில் எதுவானாலும் எனக்கு சம்மதம்!"

 "ச்சீ போடா! இருபத்தைந்து வருஷம் முன்பு ஆன கல்யாணத்துக்கு இப்போ சீதனமா கேட்கறது, நியாயமா?"

 " சரி, அப்ப நாம பணக்காரங்களாகிற வரையில் பொறுமையாயிரு!"

 தலையை குனிந்துகொண்டு அம்மா சமையலறைக்குள் அடைக்கலம் புகுந்தாள்.

 " கதிரவா! பாவம்டா அம்மா! உன் பேச்சுத் திறத்தாலே, அவ வாயை அடைச்சுட்டே! ஆனா அது நியாயமில்லேடா!"

 " அப்பா! எனக்கும் மனசுக்கு கஷ்டமாகத் தானிருக்கு! ஆனா உண்மையான காரணத்தை சொன்னால் அம்மாவோ மாமாவோ தாங்கமாட்டாங்கப்பா!"

 "என்னடா, குண்டை தூக்கிப் போடறே!"

 " ஆமாம்ப்பா! மாமா மகள் வேற ஒருத்தனை லவ் பண்றாப்பா! அவனும் அவளும் சின்ன வயசிலேயிருந்து நெருங்கிப் பழகினவங்க!

 பிரச்னை என்னன்னா, அவன் ஏழை! அவங்கப்பா, மாமாவின் கீழ் வேலை பார்க்கிற ஊழியர். நிச்சயமா, மாமா அந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கமாட்டார்.

 எனக்கு இந்த விஷயத்தை, மாமா மகள் அந்தப் பையன் மூலமாகவே செய்தி அனுப்பி, உதவச் சொல்லியிருக்கா! அதனாலேதான், காலம் கனியட்டும்னு அம்மாவிடம் சொன்னேன்............"

 இந்த ரகசியத்தை முழுவதும், அப்போது வீட்டுக்குள் வந்திருந்த மாமா, காதில் வாங்கிக்கொண்டு, தலை குனிந்தவாறு திரும்பினார்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.