(Reading time: 9 - 17 minutes)

 " எங்க அண்ணனுக்கு நான் என்ன பதில் சொல்வது?"

 " நானே, நேரம் கனிந்ததும், அவரிடமே என் முடிவை சொல்றேன்னு தெரிவிங்கம்மா!"

 " இவனை பார்த்தீங்களா, இப்படி பெரிய மனுஷன் மாதிரி பேசறதை!"

 " கதிரவா! அம்மாவை நீ ரொம்ப டீஸ் பண்ணினா, அதை அவ தாங்கமாட்டா, அது என்னை பாதிக்கும், புரிஞ்சிக்கோ! அம்மாவை சாந்தப்படுத்தறாமாதிரி, நல்ல பதிலா சொல்லுடா!"

 " சரி சரி, உட்காருங்க! உங்க ரெண்டு பேருக்காகவும் சொல்றேன்.........

 அம்மா! நான் கேட்கிற கேள்விகளுக்கு தெளிவா பதில் சொல்லு! கேள்வி நம்பர் ஒன்! உங்க அண்ணன் மகளை நான் கட்டிக்கணும்னு ஆசைப்படறியே, அது அண்ணன் மீதுள்ள பாசத்துக்காகவா, அவர் சுயமா சம்பாதித்து சேர்த்து வைச்சிருக்கிற கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காகவா, அவர் மகள் படிச்சவளா, அழகா, எனக்கு பொருத்தமானவளா இருப்பான்னு நீ நம்பறதுக்காகவா, இல்லே உன் அண்ணன் தினமும் வந்து நச்சரிக்கிறதை தாங்கிக்கமுடியாமலா? நிதானமா யோசித்து பதில் சொல்லு! ஏன்னா, அதிலேதான் நம்ம குடும்பத்தின் தன்மானமே அடங்கியிருக்கு!"

 அம்மா உடனே அப்பாவை பார்த்தாள்.

 " என்னை பார்த்து பயனில்லே! கதிரவன், நாம பெற்ற பிள்ளை! அவனிடம் ஒளிவுமறைவில்லாமல் பேசலாம், அவசரமில்லே, நாளைக்கு வேணும்னாலும் பதில் சொல்லு!"

 " ஆமாம்மா! டேக் யுவர் ஓன் டயம்!"

 " நோ நோ! இந்த விஷயத்தை ரப்பர் மாதிரி இழுக்கப்படாது, எந்த நேரமும் எங்க அண்ணன் இங்கே வந்து நிப்பாரு! அவருக்கு இன்னிக்கு முடிவா சொல்றேன்னு வாக்குறுதி தந்திருக்கேன்....."

 " சரி, சொல்லு!"

 " கதிரவா! இதுவா, அதுவான்னு அடுக்கினியே, அப்படி பிரித்துப் பார்க்க முடியாதுடா, எல்லாம்தான்! சகோதர பாசம், அவர் சொத்து வேற குடும்பத்துக்கு போய்விடக்கூடாதுங்கற எண்ணம், பெண் உனக்கு பொருத்தமானவ, பாவம்! அண்ணன் நடையா நடக்கிறாரே என்று எல்லாம் சேர்ந்துதான்டா!"

 " அப்பா! நீதான் இந்த விஷயத்துக்கு ஜட்ஜ்!

 மை லார்ட்! அம்மா சொன்ன காரணங்களிலே, ப்ளீஸ்! நோட் திஸ் பாயிண்ட்!, என் விருப்பத்தைப் பற்றியோ, உன் அபிப்பிராயத்தைப் பற்றியோ, நம்ம மூணுபேர் அடங்கிய குடும்பத்தின் தன்மானம் பற்றியோ, ஒரு வார்த்தைகூட சொல்லலே!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.