(Reading time: 9 - 17 minutes)

 கதிரவனும் அவன் அப்பாவும் வயிறு வலிக்க சிரித்தனர்.

 மகனுடைய பேச்சுத் தந்திரத்திலே மாட்டிக்கொண்டுவிட்டோமேஎன அம்மா உணர்ந்தாலும் சமாளித்தாள்.

 "ச்சீ போடா! அதெல்லாம் எப்பவுமே மனசிலே இருக்கிறதுதானே!"

 " மை லார்ட்! அம்மாவுக்கு தேவையான அவகாசம் எடுத்துக்கொண்டு, இப்ப நான் கேட்கிற கேள்விகளுக்கு அவங்க பதில் சொல்ல அனுமதிக்கணும்...."

 " டயம் கிராண்டட்!"

 " அப்பாவும் பிள்ளையும் வாய்தா வாங்கறதிலேயே இருக்கீங்களே, நோ! நான் இப்பவே பதில் தரேன்! பிரதிவாதி கேள்வி கேட்கலாம்"

 மூவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

 " கதிரவா! அம்மாவிடமிருந்த இறுக்கம் போயிடுத்துடா!"

 " மை லார்ட்! கோர்ட் இன்னும் கலையலே!

 சரி, என் முதல் கேள்வி இதோ!

 நம்ம குடும்ப தன்மானம் பற்றியும் யோசித்தேன்னு சொல்றாங்களே, என்ன யோசித்தாங்களாம்?"

 " எங்கண்ணன் மகள், நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தால், நம்ம ரெண்டு குடும்பங்களும் சேர்ந்து, ஊரிலேயே பணக்கார குடும்பமாகி விடுவோம், எல்லாரும் நம்மை மதிப்பாங்க, நம்ம செல்வாக்கு கூடும்......"

 " நல்ல பாயிண்ட்! பிரதிவாதி என்ன நினைக்கிறார்?"

 " மை லார்ட்! ஊரிலே நம்ம குடும்பத்துக்கு இப்போதுள்ள மதிப்பைவிட கூடுதலாகும்னு சொன்னால், அதன் பொருள், மாமா நமக்கு அவருக்கு இருக்கிற கௌரவத்தை நம்முடன் பகிர்ந்துக்கிறார்னுதானே அர்த்தம்!"

 " வாதி! என்ன சொல்றீங்க, சரிதானே?"

 " சரிதான்!"

 " அப்படீன்னா, மை லார்ட்! ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்! மாமாவின் கை மேலே இருக்கும், நம்ம கை கீழே இருக்கும். ஏன்னா, அவர் கொடுக்கிறார், நாம் வாங்கிக்கிறோம்!"

 " இப்ப என்னடா சொல்லவரே? சீக்கிரம் சொல்லித் தொலைடா! அண்ணன் வர நேரமாயிடுத்துடா!"

 " மை லார்ட்! வாதிக்கு நான் சொல்வதை கேட்க பொறுமையில்லை என்பதை நோட்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.