(Reading time: 9 - 17 minutes)

 " கேள்வி உன்னைப் பற்றியதாச்சே! அம்மாவின் அண்ணா தினமும் வந்து அவளை நச்சரிக்கிறானாம், நீயோ பிடி கொடுத்து பதில் சொல்லமாட்டேங்கிறாயாம், அதனாலே இன்னிக்கி ஒரு முடிவு தெரிந்தாகணுமாம்,...."

 " அதெல்லாம் சரிப்பா, நான் என்ன பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கிறாங்க, அம்மா!?"

 " வேறென்ன, அவ அண்ணனோட மகளை நீ கட்டிக்க சம்மதிக்கணும், எக்கச்சக்க சொத்து நமக்கு கிடைக்குமாம், உங்க மாமாவுக்கு உள்ள கோடிக்கணக்கான சொத்துக்கு, வாரிசு, அவரோட மகள் ஒருத்திதானாம்! பொண்ணு அழகாவும் இருக்கா, நல்லா படிச்சிருக்கா, உனக்கு அந்தப் பொண்ணு எல்லா விதங்களிலும் பொருத்தமாம்!"

 " அப்பா! நீயென்ன சொல்றே?"

 " கதிரவா! அம்மாவுக்கும் எனக்கும் நீ கோடீஸ்வரனாவதிலே, கொள்ளை ஆசை! மற்றவை கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும் பரவாயில்லே, கதிரவா! இப்ப எனக்கும் உங்கம்மாவுக்கும் பத்து பொருத்தமும் இருந்தா, கல்யாணம் ஆச்சு?"

 " ஏன், எனக்கென்ன குறைச்சல்? பிள்ளைகிட்ட ரகசியமா குறைப்படறீங்களா?"

 அம்மாவின் திடீர் பிரவேசம் கதிரவன், அவன் அப்பா இருவரையுமே திடுக்கிட வைத்தது.

 " மகாலட்சுமி! நீ சரியா புரிஞ்சிக்காமல் என்னை கோவிச்சிக்கிறே!

 நான் சொன்னது, உன் படிப்புக்கும், அழகுக்கும், சொத்துக்கும் நான் பொருத்தமானவன் இல்லேன்னு சொன்னேன்."

 " சரி, சமாளிக்காதீங்க! அதை விடுங்க! நம்ம ஒரே பிள்ளை இவன்! இவன் வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்கணும்னு நாம ஆசைப்படறதிலே, என்ன தப்பு? அதை ஏன் இவன் புரிஞ்சிக்காம இருக்கான்? இன்னிக்கி ரெண்டிலே ஒண்ணு தெரிஞ்சாகணும்."

 கதிரவன் அம்மாவை அணைத்தவாறு அவளை சமாதானப் படுத்தினான்.

 " அம்மா! உனக்கு என்னிடமிருந்து ஏதாவது ஒரு முடிவு தெரிஞ்சிக்கிறதிலே, ஆர்வமா? இல்லே, நான் உன் அண்ணன் மகளை கட்டிக்கணுங்கிறதிலே ஆர்வமா?"

 " இதென்னடா, அசட்டுக் கேள்வி! நீ என் அண்ணன் மகளை கட்டிக்கிறதிலேதான்."

 " இதுவரையிலும் நான் அந்தப் பெண்ணை கட்டிக்க மாட்டேன்னு சொன்னேனா?"

 " கட்டிக்கிறேன்னும் சொல்லமாட்டேங்கிறியே...."

 " உனக்கும் அப்பாவுக்கும் சந்தோஷமான பதில் தரணும்னுதான் எனக்கும் ஆசை. அப்படி சொல்வதற்குமுன், சில விஷயங்களிலேயே தெளிவு பெறவேண்டியிருக்கு, அதுக்கு கொஞ்சம் டயமாகுது......"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.