(Reading time: 9 - 17 minutes)

 முதலில், குமாருடன் சேர்ந்து வாழ்ந்தாள். வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீர்னு ஒருநாள், ரஞ்சனி அவனை வீட்டைவிட்டு விரட்டிவிட்டாள். காரணம் கேட்டால், சொல்ல மறுக்கிறாள், ரஞ்சனி!

 இரண்டு மாதங்களுக்குப்பின், ராஜாவும் ரஞ்சனியும் நடித்த படம் நூறுநாள் வெற்றி கண்டதும், ரஞ்சனி அவனுடன் சேர்ந்து வாழ்ந்தாள்.

 அவனும் ஆறே மாதங்கள்தான் கூட வாழ்ந்தான்! பிறகு அவனே சொல்லிக் கொள்ளாமல், விலகிக் கொண்டான். ரஞ்சனியும் அதைப்பற்றி கவலைப்படவில்லை!

 இப்போது ரஞ்சனியுடன் வாழும் கேசவன், சினிமா டைரக்டர்!

ரஞ்சனி நடித்த மற்றொரு வெற்றிப்படத்தை இயக்கியவன்!

 மணிமேகலைக்கு தெரிந்தவரையில், ரஞ்சனி-கேசவன் பொருத்தம் சிறப்பாக உள்ளதாகத்தான் நம்புகிறாள்.

 நிருபர் கேட்டதுபோல, கேசவனும் பிரிந்து போய்விடுவானோ?

 ஏனிந்தப் பெண், இப்படி மனம் போன போக்கில் வாழ்கிறாள்?

 இன்று அவளைப் பார்த்து மகிழ கூடுகிற இதே கூட்டம், நாளை ஒருநாள் அவள்மீது எவனாவது அவதூறு கிளப்பினால், கூட்டமாகச் சிரித்துப் பரிகசிக்கவும் தயங்காதே!

 ரஞ்சனிக்கு யார் இதை எடுத்துச் சொல்வது?

 சிறு வயதிலிருந்தே, ரஞ்சனி பிடிவாதக்காரி! பிறர் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டாள்! அவள் போக்கிலேதான் போவாள்.

 அந்தப் பிடிவாதம் அவளை சிறந்த நடிகையாக்கியது என்பதும் உண்மை! பள்ளிக்கூட நாடகங்களிலே துணிச்சலுடன் மேடையில் நடித்து கைதட்டல் பெறுவாள்.

 பிறர் அவளைப் பார்த்ததும் பிரமிக்கிற அளவுக்கு, மேக்-அப் போட்டுக்கொண்டு, ஸ்டைலாக உடை உடுத்தி, விளம்பரப் படங்களிலே ஓரிரண்டு நிமிடங்கள் தலையைக் காட்டி பிரபலமாகி, திரைவானில் புகுந்து ஐந்து ஆண்டுகளாக ஸ்டாராக ஜொலிக்கிறாள். படத்துக்கு, அவள் சம்பளம், இன்று ஏழு கோடி ரூபாய்!

 ஆனால் ரஞ்சனி நினைவில் வைக்கவேண்டியது, இந்தப் புகழும் வருமானமும் நிரந்தரமானதல்ல; இவளுக்கு முன்பே திரைவானில் முன்னணி நடிகைகளாக விளங்கியவர்கள், பின்னர் ஓரங்கட்டப்பட்டு, இன்று மூலையிலே முடங்கிக் கிடக்கிறார்கள் என்கிற உண்மையை ரஞ்சனி மறந்துவிடக் கூடாது.

 மணிமேகலை இதை ரஞ்சனியிடம் வலியுறுத்தப் பயப்படக் காரணம், தன்னையும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.