(Reading time: 9 - 17 minutes)

ஏத்துக்கிற சமூகம், ஒரு நடிகை இரண்டு கணவனுடன் வாழறதை ஏத்துக்காது!

 சரி விடு, ரஞ்சனி! இப்படி நிம்மதியில்லாம வாழறதுக்கு எதுக்கும்மா கோடிக்கணக்கிலே பணம்?

 நீ சம்பாதித்தது போதும்மா! நாம நம்ம ஊருக்கே போய் இருக்கும் இடம் தெரியாம நிம்மதியா வாழலாம். யோசனை பண்ணு!"

 " அம்மா! இங்கதாம்மா நீயும் நானும் வித்தியாசப்படறோம்! இப்படி ஒவ்வொரு பெண்ணும் அடி தாங்காம, ஒதுங்கிப்போய்ட்டா, இந்த ஆணாதிக்கம் நிரந்தரமா நிலைச்சு நின்னிடும்மா! அம்மா! நீ அடிக்கடி சொல்வியே, 'ஒண்ணை இழந்துதான் இன்னொன்றை பெறுகிறோம்'னு, அது கரெக்ட்மா!

 நானும் இன்னும் சில பெண்களும் இந்த போராட்டத்தில் பலியானாலும், இறுதியில் பெண் இனத்துக்கு நியாயம் கிடைத்தே ஆகணும்மா!

 பாரதியாரே பாடியிருக்கிறாரு, 'கற்புநிலை என்று சொல்லவந்தார், அதனை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்!'னு!

 'லிவிங் டுகெதர்' முறை வெளிநாட்டிலே அங்கீகரிக்கப்பட்டு, நம்ம ஊர் பெண்களே அங்கே செட்டிலாகி, அப்படி வாழ்கிறாங்கம்மா!

 இங்கேயும் அதே முறையில், ஆண்கள் வாழ்வதை ஏற்றுக்கொண்டுவிட்ட சமுதாயம், பெண்களுக்கேன் மறுக்கிறது?

 பெண் இனம் ஒழுக்கமின்றி வாழ சுதந்திரம் வேண்டும் என்பது என் வாதமல்ல; அவர்கள் ஒழுக்கமாக வாழ ஆண் இனம் ஒத்துழைப்பு தராதவரையில்தான் இந்த நிலை!

 'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்'னு எங்க பாரதி பாடியிருக்காரும்மா!

 அவர் பாடினது, மெய்யாகணும்மா! அம்மா! இனி நீ எதற்கும் அழப்போவதில்லை! எதிர்த்து நிற்பேன், அடிபட்டு செத்தாலும், கவலையில்லை! பெண் இனம் வெற்றி பெற, என் சிறிய காணிக்கையாக இருக்கட்டும்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.