(Reading time: 9 - 17 minutes)

துரத்திவிட்டால்......?

 தான் நிர்க்கதியாக தெருவில் நிற்போமே என்பதல்ல, மணிமேகலையின் அச்சம்!

 பிறகு, ரஞ்சனிக்கு உண்மையான பாசத்துடன், நல்லது, கெட்டது எடுத்துச் சொல்ல எவருமே இல்லாமல், ரஞ்சனி தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டு, பழிச்சொல்லுக்கு ஆளாகிவிட்டால்.........? என்பதே மணிமேகலையின் கவலை!

 என்ன இருந்தாலும், பத்து மாதம் சுமந்து பெற்றவளாயிற்றே!

 "ரஞ்சனி! பொதுவாழ்விலே புகுந்தபிறகு, இதெல்லாம் சகஜம்மா! இந்த நிருபர் நேரிடையா பேசிட்டான், மற்றவங்க, உன் முதுகுக்குப் பின்னாலே பேசுவாங்க! ஆக, பிறர் பேசறதை நாம தடுக்க முடியாது, நாம செய்வது, நம் மனசுக்கு சரியாயிருந்தால் போதும்! ரஞ்சனி! உன் மனசுக்கு நீ செய்வது சரின்னு தோணுதா?"

 " என்னம்மா, நீயே இப்படி கேட்கிறே?"

 " எனக்கு நீ எதுவுமே சொல்வதில்லை, நானும் உன் விஷயங்களிலே தலையிடுவதில்லே!"

 " அம்மா! நல்லவர்கள்னு நம்பி, நம்ம வாழ்க்கையிலே சேர்த்துக் கொண்டால், ஆறே மாசத்திலே, அவங்க சுயரூபம் வெளிப்படறபோது, அதிர்ச்சியாக இருக்கும்மா! அதன்பிறகு, மனசாட்சிக்கு விரோதமா கூடி வாழறது, நரகம்மா! அதனாலேதான், ........"

 " என்னிடம் சொல்லலாம்னா, விவரமா சொல்லு! எங்கே தப்பு நடக்குதுன்னு யோசிப்போம்!"

 " அம்மா! குமார் எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணி, எனக்குத் தெரியாம, வங்கியிலிருந்த என் பணத்திலே ஒரு பெரிய தொகையை களவாடினதும் வேற ஒருத்தியோட சிநேகம் வைச்சிருந்ததும் தெரியவந்தபிறகு, எப்படிம்மா அவனோட வாழமுடியும்?

 அடுத்தது ராஜா! அவன் என்னோட சினிமாவிலே நடித்தபோது, நல்லாத்தான் பழகினான். ஆனா, அவனுக்கு மார்க்கெட் சரிந்து, படங்களிலே நடிக்க சான்ஸ் கிடைக்காதபோது, என்னை சிபாரிசு செய்யச் சொல்லி வற்புறுத்தினான், நானும் சிபாரிசு பண்ணினேன், பலன் கிடைக்காதபோது, என்னையும் நடிக்கக்கூடாதுன்னு பிரஷர் கொடுத்தான்.....அதை எப்படிம்மா ஒப்புக்க முடியும்?"

 இப்ப கூடிவாழற கேசவனும், ஒரு மாசமா, என்ன செய்கிறான், தெரியுமோ? எனக்கு வர படங்களிலே எல்லாத்திலேயும் அவனை டைரக்டரா போடச் சொல்லி என்னை தயாரிப்பாளரிடம் வற்புறுத்தச் சொல்றான்,.....

 அம்மா! வெளியிலே சொன்னா கேவலம்! மற்ற ரெண்டு பேரை விட, இவன் ரொம்ப கேவலமானவம்மா!

 தயாரிப்பாளரை சம்மதிக்கவைக்க, என்னை அவரை சந்தோஷப்படுத்தச் சொல்றாம்மா!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.