(Reading time: 9 - 17 minutes)

 இவங்களோட எப்படிம்மா வாழமுடியும்?

 இதே நிலமை, ஒரு ஹீரோவுக்கு ஏற்படுமா? எந்தப் பெண்ணாவது இப்படியெல்லாம் செய்வாளா?

 எந்த துறையானாலும், பெண்கள் ஆண்களுக்கு அடங்கித்தான் நடக்கணும்னு இன்னமும் பிடிவாதம் பிடிக்கிற ஆண்கள்கை ஓங்கி நிற்குதும்மா! அதை எதிர்த்து என்னைப்போல யாராவது ஒரு பெண் நின்னா, அவள்மீது சேற்றை வாரிப் பூசி ப்ளாக்மெயில் பண்றாங்கம்மா!"

 " இந்த தொல்லையிலிருந்து விடுபட, எவனாவது ஒருத்தனை கல்யாணம் செய்துகொள்ளேன்!"

 " அதையும் ஆரம்பத்திலேயே யோசித்தேன். கழுத்திலே தாலி ஏறினபிறகு, சினிமாவிலே ஹீரோயினா வேற ஒருத்தனோடு லவ் சீனிலே நெருங்கி நடிச்சா, கணவனாலே ஏத்துக்க முடியாதும்மா! கணவனுக்காக கோடிக்கணக்கிலே வர வருமானத்தை எப்படிம்மா விடமுடியும்? அதுவும், இன்னும் ஓரிரண்டு வருஷங்கள்தான்!

 சம்பாதிக்கிற நேரத்திலே சம்பாதித்து சேர்த்து வைச்சிக்கிட்டா, பிற்காலத்திலே நிம்மதியா வாழலாமே!"

 " ரஞ்சனி! நீ நினைக்கிறது சரிதான்! ஆனா, இப்படி நாலு பேரோட கூடிவாழ்ந்தவளை எவன்டீ கல்யாணம் செய்துக்க முன்வருவான்?"

 " கரெக்ட்! அப்படி வரவனும், எனக்காகவா வருவான், என் பணத்துக்காக வருவான்! மொத்தத்திலே, பெண்கள் வாழ்க்கை ஆண்களைச் சார்ந்தே இருக்கணுங்கிற சமுதாயம்மா, இது!"

 " ரஞ்சனி! நீ சொல்வது, சரிதான்! புராணகாலத்திலிருந்தே, ஆண்கள் எத்தனை பெண்களோடு வேண்டுமானாலும் வாழலாம், ஏன்னா அவன் ஆம்பளைன்னு வாதம் பண்ற சமுதாயமாகத்தான் இருந்தது. ஏன் கடவுள்களிலே பார்த்தாலே, முருகனுக்கு, கண்ணனுக்கு, ரெண்டு பெண்டாட்டி இருக்கிறதை ஏத்துப்பாங்க, ஆனால், ஒரு பெண் தெய்வத்துக்காவது ரெண்டு கணவன் உண்டா?

 அதுவே அவங்களுக்கு சாதகமாயிருந்தா, திரௌபதிக்கு ஐந்துபேர் கணவன்னு பெருமையா சொல்வாங்க!

 இதெல்லாம் பேசிப் பயனில்லாம காலம் ஓடிக்கிட்டிருக்கு! நாமதான் வளைந்து கொடுத்து வாழ்ந்தாகணும்.

 நடிகர்கள் இன்றைக்கும் ஒரே நேரத்திலே இரண்டு மனைவிகளோட வாழலையா? அதை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.