(Reading time: 8 - 16 minutes)

என்றாவது ஒருநாள், பல ஆண்டுகளுக்குப் பிறகாவது, கௌதமி மனம் மாறலாம் என்ற நம்பிக்கையே!

 விவாகரத்து செய்ய, கௌதமி தயாராக இருக்கிறாள், அந்த அளவுக்கு கதிரவனை வெறுக்கிறாள்! அதை தவிர்க்கவே, கதிரவன் தற்காலிகமாக அடங்கிப் போனான்.

 கண்ணனுக்கு, கதிரவனை, 'அண்ணா' என்றழைக்க, கௌதமி சொல்லிக் கொடுத்தபோது, அவளுடைய பெற்றோர் இரவெல்லாம் உறக்கமின்றி, இப்படி சகித்துக்கொண்டு வாழ்வதைவிட இறைவனிடம் போய்ச் சேரவும் தயாராக இருந்தார்கள்.

 பழகப் பழக, எல்லாம் சகஜமாகிவிடுவதால், நாளடைவில் சம்பந்தப்பட்ட ஐவருமே நெருடல் ஏதுமின்றி உறவைத் தொடர்ந்தனர்.

 ஐந்து ஆண்டுகள் கழிந்ததும், கதிரவனுக்கு பதவி உயர்வு தந்ததோடு, அவன் புகைப்படத்தையும் ஊடகங்களில் வெளியிட்டு, வங்கி அவனை கௌரவித்தது!

 இது நல்ல தருணம் என்று கௌதமியின் பெற்றோர், மகளிடம் பேசிப் பார்த்தனர்.

 " கௌதமி! வாழ்க்கை ஒரு சக்கரம். மேலே உள்ளது, கீழே வருவதும், கீழே உள்ளது மேலே எழுவதும் இயல்பு! எந்த ஊடகங்கள் கதிரவனை கேவலமாக விமரிசித்ததோ, அதே ஊடகங்கள் இன்று அவனை பாராட்டி, பேட்டி எடுத்து மகிழ்கின்றன.

 பொதுவாக, மக்கள் இன்று தீவிரமாக, காரசாரமாக விவாதிக்கிற ஒரு விஷயத்தை அறவே மறந்து, வேறொரு விஷயத்தில் மூழ்கிவிடுவார்கள்!

 சமுதாயத்தில் அவனுக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிட்டது. சொல்லப்போனால், அவனை நீ மணந்தபோது அவனுக்கு சமூகத்தில் இருந்த கௌரவத்தைவிட, தற்போது அவனுக்கு அதிக கௌரவம் கிடைத்துள்ளது.

 நீ சற்று உன் மூர்க்கமான போக்கை மாற்றிக் கொள்வதுதான், விவேகம்!

 தவிர, எங்களுக்கும் வயதாகிறது, எந்த நேரமும் நாங்கள் உன்னையும் கண்ணனையும் பிரியும்படி நேரலாம். அப்படி பிரியும்போது, எங்கள் மனதில் உள்ள நீங்காத உறுத்தல், நெருடல், கறையைப் போக்குவது மகளாகிய உனக்கு கடமை இல்லையா?

 தவிர, கண்ணனைப்பற்றி கொஞ்சம் நினைத்துப்பார்! அவன் என்ன பாவம் செய்தான், அவனுக்கேன் தண்டனை? உன் மூர்க்கத்தனத்தினால், அவனை பழி வாங்க உனக்கென்ன உரிமை இருக்கிறது? அந்தப் பாவத்தை சுமக்காதே!

 யுகயுகமாக மனித வரலாற்றை புரட்டிப் பார்! தவறே செய்யாதவர் ஒருவர்கூட இல்லை!

 அண்மைக் காலத்தில், காந்தியடிகளே, தன் சுயசரிதையில் தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டதோடு, அவைகளிலிருந்து விடுபட்டு, தான் எப்படி உலகமே ஒப்புக்கொள்கிற

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.