(Reading time: 8 - 16 minutes)

மாதங்களிலும், தினமும் தவறாமல், பிரசுரிப்பதும், இதைப்பற்றி தொலைக்காட்சியில் புகைப்படத்துடன் விமரிசிப்பதுமாக, கதிரவனின் பெயருக்கு களங்கம் கற்பித்து மகிழ்ந்தனர்.

 செய்திகளை படிக்கும் வாசகர்களும், காட்சியை காண்போரும், தினமும் கௌதமியைப் பார்த்து ஏளனமாக சிரிப்பதுவும் காறித் துப்புவதும், அவள் காதுபட நையாண்டியும் செய்து, கௌதமியை தற்கொலை முடிவுக்கு தள்ளின!

 நல்ல வேளையாக, அவளுடைய தாய் சரியான நேரத்தில் அதை தடுத்தி நிறுத்தியதோடு, இனி ஒருநாளும் அந்த தவறான செயலில் இறங்கமாட்டேன் என்கிற சத்தியமும் வாங்கிக் கொண்டாள்.

 அவள் அதற்கு உபயோகித்த ஒரே வழி, இதுதான்!

 " கௌதமி! உன் உயிரை மாய்த்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கலாம், ஆனால் உன் வயிற்றில் வளரும் ஆறுமாத கருவைக் கொல்ல உனக்கு உரிமை கிடையாது!"

 வயிற்றில் வளர்ந்த சிசுவினால் தற்கொலை முடிவை கைவிட்ட கௌதமி, நாளாக ஆக, கதிரவனால் தன் வாழ்க்கையே நாசமாகிவிட்டதாக, தன் சுயமரியாதையே பறிபோய்விட்டதாக, சமூகத்தின் ஏளனத்துக்கு ஆளாகி புழுவைவிட கேவலமாக நடத்தப்படுவதாகவும் மனதில் வெதும்பி, கதிரவனை நேரில் காண்பதையே அருவருப்பாக கருதினாள்!

 கௌதமியின் மனதை மாற்ற, அவள் பெற்றோர் மட்டுமல்ல, கதிரவனின் நண்பர்களும், பெற்றோரும், உறவினர்களும் முயற்சித்தும் பலன் இன்றி கைவிட்டனர்.

 உறவுமுறையை வெளிப்படுத்தாமல், மாதம் ஒருமுறை தன் மகனைப் பார்க்க அனுமதியாவது கதிரவனுக்கு தந்தாளே என ஆறுதல் அடைந்தனர்!

 கௌதமி, கண்ணனுக்கு தன்னை அக்காவாகவும், தன்னைப் பெற்றவர்களே கண்ணனையும் பெற்றவர்கள் என்றும் போலியான உறவுமுறை ஏற்படுத்திக் கொடுத்தாள், கண்ணனுக்கு!

 பாவம், குழந்தைக்கு என்ன தெரியும்?

 தன் தாத்தாவை 'அப்பா' என்றும், பாட்டியை 'அம்மா' என்றும், பெற்றவளை 'அக்கா' எனவும் அழைத்து மகிழ்ந்தது!

 கண்ணன், தங்களை 'அப்பா', 'அம்மா' என அழைக்கும்போதெல்லாம், கௌதமியின் பெற்றோர் கூனிக்குறுகி ஒடிந்து போவார்கள்.

 வேறென்ன செய்வது? கௌதமியோ பிடிவாதமாக இருக்கிறாள், அவளை எதிர்த்தால், தற்கொலை செய்துகொள்வதாக, மிரட்டுகிறாள்.

 கதிரவன் இத்தனை அவமானங்களுக்கும் அடங்கி ஒத்துக்கொண்டதற்கு காரணம், முதலாவது, தன் மகனுடன் மாதம் ஒரு நாளாவது கொஞ்சி மகிழ வாய்ப்பு கிடைத்ததே!, இரண்டாவது,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.