(Reading time: 13 - 26 minutes)

சிறுகதை - அறிகுறியே நோயா? - ரவை

"டாக்டர்! என் மகளை நல்லா டெஸ்ட் பண்ணிட்டீங்க, இப்பவாவது அவளுக்கு என்ன நோய்னு சொல்ல முடியுமா?"

 "வேறெந்த நோயும் பாதிக்காத நிலையிலே, அவளுக்கு வந்திருப்பது, 'டிப்ரெஷன்' தான்! இது எந்தப் பெண்ணுக்கும், ஆணுக்கும், எந்த வயதிலும் காரணமின்றியே வரும்! கவலைப்பட ஒன்றுமில்லை! எப்படி சொல்லிக்காம வந்ததோ, அதேபோல சொல்லிக்காமலே ஒருநாள் போயிடும்!"

 " சாதாரணமா எப்பவும் உற்சாகமா இருக்கிற என் மகள், திடீர்னு கொஞ்சநாளா, 'டல்'லா இருக்காளே, எதனாலேன்னு கண்டுபிடிக்கச் சொன்னா, நான் சொன்ன அறிகுறிகளையே, நோயாக்கிட்டீங்களே, ஒண்ணும் புரியலியே?"

 " நீங்க மருத்துவம் படிக்காமலே நோயை தெரிஞ்சிக்கிட்டதுக்கு பெருமைப்படுங்க! சரி, உங்க திருப்திக்கு சில டானிக், வைடமின் மாத்திரை எழுதித் தரேன், சாப்பிட வைங்க! அதுவே குணமாயிடும்!"

 டாக்டர் விரட்டாத குறையாக,

நோயாளியின் தந்தை மேகநாதனை அனுப்பி வைத்தார்.

 மேகநாதன் சிந்தனையில் மூழ்கியவராக, வீடு வந்து சேர்ந்தார்.

 மனைவியிடம் டாக்டர் கூறியதை தெரிவித்தார்.

 "அதுசரி, வர வழியிலே மருந்து கடையிலே அந்த டானிக், மாத்திரைகளை ஏன் வாங்கலே?"

 " ஏதோ யோசனையிலே மறந்துட்டேன்....இதோ போய் வாங்கிவரேன்......."

 " டிப்ரெஷன் மகளுக்கா, உங்களுக்கான்னு சந்தேகமா இருக்கே......."

 " சரிசரி, நான் போய்ட்டு வர்றதுக்குள்ளே, நீ யோசித்துவை, என்ன செய்யலாம்னு..........."

 மேகநாதன் கிளம்பியதும், அவர் மனைவி ரேணுகா யோசித்தாள், மகளைப்பற்றி!

 மகள் சித்ரா படிப்பில் சூட்டிகை! கூடவே நல்ல குரல்வளம், சிறப்பாக பாடுவாள் கர்நாடக சங்கீதம், திரை இசை இரண்டுமே!

 ஜர்னலிசம் படித்து பட்டம் பெற்று, ஃப்ரீலான்ஸா, எல்லா செய்தித்தாள்களிலும், நிறைய கட்டுரைகள் எழுதுவாள்! அவைகளை வாசகர்கள் நிறைய பாராட்டுவார்கள்.

 இவ்வளவு செயல்களுக்கு இடையே, சில்சீ வெப்சைட்டில் சீரியல், சிறுகதை, கட்டுரை, கவிதை, நகைச்சுவைத் துணுக்குகள் எழுதித் தள்ளுவாள்.

 வீட்டில், தாய்க்கு அவ்வப்போது சமையலில் உதவியும் செய்வாள்.

 முக்கியமாக, தந்தை மேகநாதனிடம் அரசியலை அலசுவாள், நாட்டுநடப்பை விளக்குவாள், மனோரீதியாக ஒவ்வொருவரும் ஏன், எப்படி, வித்தியாசமாக நடந்து கொள்கிறோம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.