(Reading time: 13 - 26 minutes)

 தாயும் தந்தையும் மகளை அணைத்து, முத்தமிட்டனர்.

 மகளோ, இருவரையும் உதறித் தள்ளிவிட்டு, தன் அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டாள்.

 " ரேணு! நீ என்னமோ சொன்னே, அவ ஒண்ணுமே பேசாம ரூமுக்குள்ளே போய்ட்டா.......?"

 " கொஞ்சம் கொஞ்சமாத்தாங்க, சகஜ நிலமைக்கு வருவா....."

 கணவனிடம், அவள் நடந்ததை விவரமாகச் சொன்னாள்.

 " ரேணு! சித்ரா கூட படிச்ச அவ சிநேகிதி யாரையாவது கேட்டுப் பார்ப்போமா, எதனாலே நம்ம பொண்ணு இப்படி இருக்கான்னு?"

 " சித்ரா படிப்பு முடிச்சு மூணு வருஷமாயிடுத்து, இப்பல்லாம் அவ எந்த சிநேகிதியோடும் நெருக்கமாப் பழகறதில்லே..."

 " ஆங்! தினமும் நியூஸ்பேப்பரிலே வர்ற எல்லா செய்திகளையும் ஒண்ணுவிடாம படிப்பா,,,,இன்னிக்கிக்கூட படிச்சா....ஆனா, முன்னேபோல ஆழ்ந்து படிக்கலே, சும்மா ஒரு தரம் புரட்டிவிட்டு தூக்கி எறிஞ்சிட்டா!......"

 " ஆங்! இதுவாகத்தாங்க இருக்கணும், நிச்சயமா!"

 "எது, எது, சொல்லு!"

 " அவளுக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஆசை வந்திருக்கணும், இதை புரிஞ்சிக்காம நாம ரெண்டு மரமண்டைகளும் வேறெதையோ யோசிக்கிறோம், உடனே எடுங்க அவ ஜாதகத்தை, ஜோசியரிடம் காட்டி, ஜாதகரீதியா ஏதாவது தோஷம் இருக்கான்னு பார்ப்போம்........"

 " ரேணு! என்ன பேசறே? அவ உயிரோட இருக்கணுமா, வேண்டாமா?"

 " ஓ! அதை மறந்துட்டேனே......"

 " எப்படி உன்னால அதை மறக்க முடியும், பெற்றவடீ, நீ! நமக்கு இருக்கிறது, ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு, இவ ஒருத்திதான்! நாம உயிர் வாழறதே, இவளுக்காக மட்டுமே! உண்டா, இல்லையா?"

 " ஆமாங்க! அவளுக்கு ஐந்து வயதானபோதே, மூச்சுவிட முடியாம குழந்தை திணறியபோது, டாக்டர் டெஸ்ட் பண்ணிட்டு, சொன்னதை மறக்கலீங்க, எந்த விஷ பரீட்சையும் வேண்டாம்........."

 " அவளுக்கு கல்யாணமே வேண்டாம், அவ உயிரோடிருந்தா போதும்!"

 " அது சரிங்க, உண்மை தெரியாம, குழந்தை என்ன நினைப்பா, நம்மைப் பற்றி! அவளைப்பற்றி, அவ சந்தோஷத்தைப்பற்றி நாம கவலையே படலைன்னு நினைப்பாளே, அதை எப்படி சமாளிக்கிறது?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.