(Reading time: 13 - 26 minutes)

தூங்கிண்டே இருக்கணும்னு தோணுது, ஆனா தூக்கம் வரலை......."

 " சித்ரா! இதையெல்லாம் டாக்டரிடம் சொன்னதுக்கு, கொஞ்ச காலத்துக்கு இப்படித்தான் இருக்கும், பிறகு தானாகவே சரியாகிடும்னு சொல்றாரும்மா!"

 " அம்மா! எனக்கு...."

 " சொல்லும்மா! என்ன வேணும்னு சொல்லும்மா! எதுவாயிருந்தாலும் உடனே வாங்கித்தரோம்......."

 " நிச்சயமா?"

 " சத்தியமா!"

 " எதுவா இருந்தாலும்?"

 " எதுவாயிருந்தாலும்! என்னங்க! நீங்களும் சொல்லுங்க!"

 " ரெண்டு பேரும் என் கையில் அடித்து சத்தியம் பண்ணுங்க!"

 சிறிதும் யோசிக்காமல், இருவரும், சித்ராவின் தலையில் கை வைத்தே சத்தியம் செய்தார்கள், சித்ரா கேட்கப் போவதை அறியாமல்!

 " எனக்கு உடனடியா விஷம் வேணும்மா! அதை குடிச்சிட்டு செத்துப் போகணும்மா!"

 இருவருக்கும் மகள் சொன்னதைக் கேட்டதும், அதிர்ச்சியும் வருத்தமும் மேலோங்கி தங்கள் தலையில் அடித்துக்கொண்டு, பூஜையறைக்கு ஓடி, தெய்வங்களின்முன் விழுந்து குமுறினர்.

 " இறைவா! எங்களுக்கு இப்படி தண்டனை தரவா, இவளை மகளாக கொடுத்தே?"

 இறைவன் இதழ் விரித்து புன்னகை புரிந்ததுபோல இருவருக்கும் தோன்றியது!

 ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு கண்ணீர் வடித்தனர்.

 வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கண்களை துடைத்துக்கொண்டு, கதவைத் திறந்தனர்.

 காவியுடை அணிந்த துறவி ஒருவர்!

 யாரென இருவருக்கும் புரியவில்லை!

 இருப்பினும், மரியாதை நிமித்தம், வழி விட்டு, உள்ளே வரச் சொன்னார்கள்.

 அவரும் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தார், சித்ராவின் பக்கத்தில்!

 " சுவாமி! தாங்கள் யார்னு தெரியலையே.....எங்களை உங்களுக்கு எப்படி தெரியும்?"

 துறவி சிரித்தார்.

சித்ராவை அணைத்துக்கொண்டு அவளையே தீர்க்கமாகப் பார்த்தார்.

 " சொல்லும்மா, சித்ரா! உன்னைப் பெற்றவங்களுக்கு, நான் யாரு, என்னை யார் இங்க வரச்சொன்னதுன்னு"

 சித்ரா துறவியின் காலில் விழுந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.