(Reading time: 13 - 26 minutes)

 சித்ரா! பிறந்ததிலிருந்து நீ சந்தோஷத்தையே, உற்சாகத்தையே, நம்பிக்கையையே, தொடர்ந்து அனுபவித்து வந்ததினாலே, இந்த மாறுதலான அனுபவத்தைக் கண்டு மிரண்டு போயிருக்கே!

 சித்ரா! நீ புத்திசாலி! யோசித்துப் பார்! வெயில் இருந்தா, நிழலும் கூடவே இருக்கும் இல்லையா?

 முதல்லே இளம் வெயில் உடம்புக்கு இதமாக இருக்கும், வெயில் ஏற ஏற, உஷ்ணம் தாங்காம, கால்கள் சூட்டை தாங்காம, நிழலைத் தேடும் இல்லையா?

 அதைப்போல, உன் மனசு, நிறைவா மகிழ்ச்சியை அனுபவித்தபிறகு, அந்த மகிழ்வு திகட்டி, இப்ப மாறுதலா சோகத்திலே, வெறுப்பிலே, அவநம்பிக்கையிலே மூழ்கித் திளைக்குது.

 எப்படி சூடேறிய பாதங்களுக்கு நிழல் தேவானந்தமாக இருக்குமோ, அப்படி உன் மனசுக்கு சோகம் பிரும்மானந்தமாயிருக்கு!

 உங்க மூணு பேருக்குமே சொல்றேன்! எப்படி மனசுக்கு மகிழ்ச்சி இதமாயிருக்குறதோ, அதே அளவுக்கு சோகமும் பிடிச்சிருக்கு!

 அதெப்படி இருக்க முடியும்னு கேட்கறீங்களா?

 முதல்லே, மேகநாதா! நீ சொல்லு! நீ குழந்தையா, சிறுவனா, வாலிபனா இருந்த வரையில், பாகற்காய்னா சொன்னாலே, வயிற்றை குமட்டும் இல்லையா?

 ஆனா இப்போ, அதே பாகற்காயை சுவைத்து, ருசித்து, விரும்பி சாப்பிடுகிறாயா இல்லையா? இவங்களுக்கு தெரியணும், வாயை திறந்து சொல்லு!"

 " ஆம் இறைவா! இப்பவும் நான் ரேணுவை அடிக்கடி பாகற்காய் வறுவல் செய்யச் சொல்லி விரும்பி, ருசித்து, ரசித்து சாப்பிடுவேன், இது சத்தியம்!"

 " இப்ப ரேணுகா! உன் அனுபவத்தை நீயே சொல்றியா, நான் சொல்லட்டுமா?"

 " நானே சொல்லிடறேன் இறைவா! முன்பெல்லாம் என் அப்பா, அம்மா என்னை தினமும் சாமி கும்பிட்டுவிட்டுத்தான், சாப்பிடணும்னு கட்டாயப்படுத்துவாங்க, நானும் பூஜையறையில் நின்னு கண்ணை மூடிண்டு சாமி கும்பிடறதா பாவனை பண்ணிட்டு, ஓடிப்போய் சாப்பிட அமர்வேன், ஆனா இப்போ.......

 இறைவா! சத்தியமா சொல்றேன், தினமும் குளித்துவிட்டு, குளிக்கும்போதே இறைவன்மீது சுலோகம் சொல்லிக்கொண்டே குளிப்பேன், குளித்து ஈரத்துணியுடனேயே பூஜையறைக்குள்ளே நுழைஞ்சு இருகரம் கூப்பி, சாமி படங்களை உன்னிப்பா பார்த்து, அதுவும் கண்களை உற்றுப் பார்த்து, மனசுக்குள்ளே தெய்வத்தோடு பேசுவேன், எங்களுக்கு ஆனந்தமான வாழ்வை தந்ததுக்கு மனதார நன்றி சொல்வேன், நேரம் போவதே தெரியாது, பிறகு வேறு வழியின்றி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.