(Reading time: 8 - 16 minutes)

நல்லவனானேன் எனவும் சொல்லியிருக்கிறார்.

 புராணத்தில், அவதார புருஷன் ஶ்ரீராமனே, தவறே செய்யாத தன் மனைவியை, சீதையை, தீக்குளிக்க வைத்த தவறை செய்யவில்லையா?

 திருப்புகழ் அருணகிரிநாதர் வாழ்வின் முற்பகுதியில் வாழ்ந்த வாழ்வை பிற்பகுதியில் மாற்றிக் கொண்டு மகானாகிவிட வில்லையா?

 கொள்ளையடித்து வாழ்ந்து தன் குடும்பத்தை காப்பாற்றிய வால்மீகி திருந்தவில்லையா?

 நீயும் நானும் சிறு தவறுகூட செய்யாத அப்பழக்கற்றவர்களா, யோசித்துப் பார்!

 நாம் பிடிபடாமல் தப்பித்தோம், அதிர்ஷ்டவசமாக! பாவம், கதிரவன்! மாட்டிக்கொண்டு மானம் இழந்தான்!

 ஆனால், உன்னைவிட கதிரவன் ஆயிரம் மடங்கு உயர்ந்தவன், உத்தமன்! எப்படித் தெரியுமா?

 நீயும் நானும் வாழ்கிற இன்றைய சமூகத்தில், ஆண்கள், ஒருவனுக்கு ஒருத்தியாகவா நெறியுடன் வாழ்கிறார்கள்?

 பகிரங்கமாக, மனைவியை ஆண்டுக்கொரு முறை மாற்றிக் கொள்ளுகிற கதாநாயகர்களை தெரியாதா? கீழ்த்தட்டு, நடுத்தட்டு, மேல்தட்டு, எல்லா ஆண்களும் தங்களிடம் கேவலமாக நடந்துகொண்டதாக, 'மீ டூ' பெண்கள் கதறுவது உன் காதில் விழவில்லையா?

 இந்த ஐந்து ஆண்டுகளில், என்றாவது ஒருநாள், இல்லை ஒரு முறை, கதிரவன் உன்னை கோபமாகவோ, வெறுத்தோ பேசியிருப்பானா? பிற பெண்களுடன் தவறாகப் பழகியிருப்பானா? அவனைப் பெற்றவர்கள், அவனிடம் வற்புறுத்தியும், உன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை மணக்க கதிரவன் தலையசைத்தானா?

 தான் பெற்ற மகனே, தன் உதிரத்தின் உதிரமே தன்னை, 'அண்ணா' என அழைக்கிற அவமானத்தை ஒரு நாளல்ல, இரு நாளல்ல, ஐந்து ஆண்டுகள், சகித்துக் கொண்டு வாழ்கிறானே, அவன் உன்னைவிட உயர்ந்தவன் இல்லையா?

 உன் மனதில், 'தான்' என்கிற அகம்பாவம், கோலோச்சுவதால், உன் சுயமரியாதை பாதிக்கப்பட்டவுடன், அவனை தூக்கி எறிந்தாய்!

 அவனோ, கொஞ்சங்கூட, தன்னை நீ அவமானப்படுத்துவதை பெரிதுபடுத்தாமல், என்றாவது ஒருநாள் உன் உள்ளம் மாறும், கோபம் குறையும், என பொறுமையாக, அடக்கமாக, சுயமரியாதை நினைவேயின்றி காத்திருக்கிறானே, என்ன காரணம் தெரியுமா?

 அவன் உன்மீது வைத்திருக்கிற அன்பு! அடிப்படையில் நீ நல்லவள், உன்னை ஊடகங்கள் கோபம் அடையச் செய்ததால் நீ மனம் வெறுத்துவிட்டாய், என்று உறுதியாக இன்னமும் பொறுமையுடன் உனக்காக காத்திருக்கிற கதிரவன்தான் எங்களுக்கு உத்தமனாக,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.